வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில், “உங்கள் வேட்பாளர் பிரியங்காவை பற்றி சொல்கிறேன் கேளுங்கள். எனது தந்தை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியை சந்தித்து கட்டியணைத்தவர் பிரியங்கா. பின்னர் என்னிடம் வந்து நளினியை நினைத்தால் பாவமாக இருக்கிறது எனக் கூறியவர். அப்படி வளர்க்கப்பட்டவர் தான் பிரியங்கா” எனக் கூறினார்.