ஆட்சி மட்டத்தில் ஊடுருவலா?

Viduthalai
1 Min Read

இந்துக்களை ஒன்றிணைக்க அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தனி ‘வாட்ஸ் ஆஃப்’ குழுவாம்!

திருவனந்தபுரம், நவ.5 அக்டோபர் 31 இல் கேரளாவில் பல அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அதுவும் இந்து அய்.ஏ.எஸ் அதிகாரிகளை மட்டும் குறிவைத்து ஒன்றிணைத்து ‘மலையாள இந்து அதிகாரிகள்’ என்ற வாட்ஸ் அப் குழுவை கோபாலகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.
ஏற்ெகனவே மூத்த அய்பிஎஸ் அதிகாரியும், கேரள ஏடிஜிபியுமான எம்.ஆர்.அஜித் குமார்ஆளும் கேரள அரசுக்கு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை இரகசியமாக சந்தித்தது வெளியுலகுக்கு வந்தவுடன் கேரள அரசு அவரை பதவியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரின் வாடஸ் அப் செயலியில், ‘ ஹிந்து அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் ‘ என்ற பெயர் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த குழுவில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் பலர் இடம்பெற்று இருந்தனர்.

மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த முடிவு அல்லது செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி ஆகும். அப்படி இருக்கையில் மத ரீதியில் பெயர் கொண்ட ‘வாட்ஸ் அப் குரூப்’இல் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. குரூப்பை ஆய்வு செய்த போது அதன் அட்மின் ஆக இருந்தது மாநில தொழில்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் பெயரை காட்டியது. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த குரூப் கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தனது அலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து புகார் அளித்த அவர், தனது நண்பர் ஒருவர் கூறியபிறகே வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது தெரியவந்தது. எனது அலைபேசி ஹேக் செய்யப்பட்டதுடன், அதன் மூலம் பல வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன எனக்கூறியுள்ளார். மேலும், அலைபேசி ஹேக் செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு அதிகாரிக்கும் தனித்தனியே செய்தி அனுப்பி வருகிறாராம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *