கவுகாத்தி, அக்.18- அசாம் மாநிலத்தில், மும்பை சென்று கொண் டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மும்பைக்கு லோகமான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் நேற்று (17.10.2024) பிற்பகலில் அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள திபாலாங் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. ரயிலின் இன்ஜின் உள்பட 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கின. பிற்பகல் 3.55 மணி அளவில் இந்த விபத்து நடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீட்பு பணி அதிகாரிகள் மற்றும் மீட்பு ரயில் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாரிகள் மீட்பு பணி களை மேம்பார்வையிட்டு வழிநடத்தினர்.
காரணம் என்ன?
ரயில் தடம்புரண்டதற் கான காரணம் என்ன வென்று உடனடியாக தெரியவில்லை. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக வேறு பெட்டிகளில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள ரயில் நிலையத் திற்கு அழைத்துச் செல் லப்பட்டனர். தடம்பு ரண்ட ரயில்பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணிகள், நீண்ட நேரமாக நடந்தது.
இதனால் அந்த தடத்தில் ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் வேறு வழியில் திருப்பிவிடப்பட்டன. சில ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.