அய்தராபாத், மே 25-–தெலங்கானா மாநி லத்தில் இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசி வரும் நிலையில், வெயிலின் கொடுமை தாளாமல் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ள தாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் பொங்குலேட்டி சிறீநிவாஸ் ரெட்டி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் படி, மாநிலத்தின் 7 மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந் துள்ளன.
ஜெயசங்கர் பூபாலப் பள்ளி – 4 பேர் வாரங்கல் – 3 பேர் கரீம்நகர் – 3 பேர் நிஜாமாபாத் – 3 பேர் ஜோகுலாம்பா கத்வால் – 1 நபர் ரெங்காரெட்டி – 1 நபர் சூர்யாபேட்டை – 1 நபர் ரூ.4 லட்சம் நிவாரணம்:
முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டியின் உத்தரவின் பேரில், வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி (Ex-gratia) வழங்கப்படும் என அமைச்சர் அறிவித் துள்ளார்.
இந்த நிவாரணத் தொகையை உடனே வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எல் நினோ (El Nino) விளைவு காரணமாகவே இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் சில பகுதி களில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
அடுத்த சில நாள் களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குளிர்ந்த குடிநீர், மோர் மற்றும் ஓ.ஆர்.எஸ் (ORS) பாக்கெட்டுகளை தடையின்றி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மதியம் 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசிய மின்றி வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
