வதோதரா, ஆக.28 தெற்கு குஜராத் பகுதியில் பெய்துவரும் மழையால் போடெலி-சோட்டா உதய்பூர் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. மகிசாகர் மாவட்டத்தின் பமன்வாடா கிராமத்தில் மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு இணையர் உயிரிழந்தனர். 26.8.2024 அன்று அவர்களது வீட்டின் சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது. உயிரிழந்தவர்கள் லட்சுமண படேலியா (45) மற்றும் அவரது மனைவி கைலாஷ் (42) என அடையாளம் காணப்பட்டனர். போடெலிக்கும் சோட்டா உதய்பூருக்கும் இடையிலான பாலம் மாநிலத்தை மத்தியப்பிரதேசத்தின் அலிராஜ்பூருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள தற்காலிக மாற்று வழிக்கும் பாரஜ் ஆற்றின் கொந்தளிப்பால் சேதமடைந்தது.
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது வதோதரா மாவட்டம் துண்டிப்பு!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
