ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: அண்மையில் மறைவுற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்களுக்கு முனைவர் பட்டம் தர முட்டுக்கட்டை போட்ட ஆளுநரின் இன்றைய மனநிலை எப்படி இருக்கும்?

– பா.கண்மணி, ஓசூர்

பதில் 1: இந்த அளவுக்கு உங்கள் சிந்தனையையும், என் நேரத்தையும் நீங்கள் வீணாக்கியிருக்கக் கூடாது. வேறு எத்தனையோ செய்திகள் உள்ளனவே!

கேள்வி 2: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தையும் – அண்ணாமலையின் ‘யாத்திரை’யையும் ஒப்பீடு செய்வது முறையா?

– சி.சிவாஜி, தருமபுரி

பதில் 2: முறையல்ல; இயற்கையானதும், செயற்கையானதும் எப்போதும் வேறுபட்டவைகள்தானே!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 3: அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணிக்கு சாதகமாக இருக்குமா?

– நே.சக்தி, வேலூர்

பதில் 3: பா.ஜ.க. – பிரதமர் மோடியின் தேர்தல் பேச்சுகள் – இலவச அறிவிப்பு திடீர் மழைகள் எல்லாம் தோல்வி பயத்திலிருந்து அவர்களை காப்பாற்றிக் கொள்ள அச்சத்துடனே எடுக்கும் நிர்ப்பந்தங்களே அவை என்கிறபோது 5இல் பெரும் பகுதியில் காங்கிரஸ் ஆட்சி அமையவே வாய்ப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது!

கேள்வி 4: தி.மு.க. இளைஞரணியின் செயலாளர் உதயநிதியின் இருசக்கர ஊர்திப் பிரச்சாரம்- மாநில உரிமை மீட்புப் பயணம் பயன் தருமா?

– மு.சிவசக்தி, கள்ளக்குறிச்சி

பதில் 4: அப்பயணத்தின் தலைப்பே மிக ‘சுருக்’கென்று லட்சியப் பயணம் – மாநில உரிமை மீட்புக்கான  பலன் தரும்  பயணம் என்பதைப் பறை சாற்றுகிறதே! “நாங்கள் பெரியாரின் பேரன்கள், கோட்சேயின் பேரன்களை எதிர்கொள்வதே இந்த இலட்சியப் பயணம்” என்ற பிரகடனமே எதிரிகளை அதிரவைக்கும் லட்சிய முழக்கப் பயணம்தானே!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 5: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மகளிர் உரிமைத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றுவது குறித்து தங்கள் கருத்து?

– சு.ஆனந்த், வெள்ளவேடு

பதில் 5: அத்திட்டம் எடுத்துக்காட்டானது என்பதை அவர்கள் அனைவரும் மறைமுகமாகப் பாராட்டி, அதனால் தாங்களும் பயன் பெறப் பாடமாக அமைந்துள்ளது என்ற உண்மையின் வெளிச்சமே அது!

கேள்வி 6: வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி தங்களுக்கு 91 வயது – அதுகுறித்து தங்களது தோழர்களுக்கு தங்களுடைய வேண்டுகோள் என்ன?

– மு.கதிரவன், செஞ்சி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 6: அப்படியா? நினைவூட்டியமைக்கு நன்றி! இப்படி வயது நினைப்பின்றிப் பணியாற்றுங்கள் – கடமையாற்றுங்கள் – தொண்டாற்றுங்கள் சமூகத்திற்கு என்பதே! பெரியார் புத்தியைத் தேடுங்கள் – நாடுங்கள், அதற்காக எப்போதும் ஓடுங்கள்!

கேள்வி 7: பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இப்பொழுது சமூகநீதிபற்றி பேசுகிறார்களே, இது எதைக் காட்டுகிறது?

– கே.கர்ணன், கண்ணந்தங்குடி

பதில் 7: 5 மாநில சட்டமன்றத் தேர்தல் – அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தங்கள் கட்சியின் வெற்றி மிகவும் சந்தேகத்திற்குரியதாகி வருவதை அவர்கள் உணர்ந்துள்ளதையே அது காட்டுகிறது.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 8: தமிழ்நாட்டு மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களுடைய பொருட்கள் சூறையாடப்படுவதும் தொடர்கிறதே, இதற்கு முற்றுப்புள்ளி கிடையாதா?

– வே.இராமலிங்கம், செங்கல்பட்டு

பதில் 8: ஒன்றிய ஆட்சி மாற்றம் – இந்தியா கூட்டணி வெற்றி வந்தால் வற்புறுத்தி செயல்பட வைப்போம்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 9: தமிழ்நாட்டைப் போன்றே பீகாரிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளதே?

– இரா.இராஜேந்திரன், மும்பை

பதில் 9: இந்தியா முழுவதிலும் இது வேகமாகப் பரவுவது இனி காலத்தின் கட்டாயம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *