வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க முடியாது! ஒன்றிய பா.ஜ.க.அரசு அறிவிப்பு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, ஆக. 11 வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 ஆவது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலச்சிரிவில்சிக்கி இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 138 பேரை காணவில்லை. ஏராளமான வீடுகள் உடைந்து நொறுங்கி போயுள்ளன.

.இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி வயநாடு சென்று நேற்று (10.8.2024) ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதனிடையே வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பழைய அறிவிப்பு ஒன்றை மேற்கோள் காட்டி வயநாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *