தஞ்சை, ஜூலை 26 தமிழ்நாடு அரசால் அண்மையில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டு 22.07.2024 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியங்கா பங்கஜம் அவர்களை 25.07.2024 மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழக மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன், மாநகர இணைச்செயலாளர் இரா. வீரக்குமார், ஒரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார் ஆகியோர் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்
பாகம்-1 வாழ்வியல் சிந்தனை ஆங்கில நூல், தந்தை பெரியார் பற்றிய நூல்களை வழங்கியும், பய னாடை மற்றும் பேனா வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்ட மாவட்டத்தில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று இருப்பது சிறப்புக்குரி யது. தந்தை பெரியார் கண்ட புரட்சி பெண்ணாக மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில் தங்கள் பணி சிறக்க வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு பெண் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பேற்பது சிறப்புக்குரியது தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்ததாகக் கழகத்தினர் தெரிவித்தனர்.
கழகப் பொறுப்பாளர்களை அன்புடனும், வாஞ்சையுடனும் வரவேற்ற மாவட்ட ஆட்சித் தலை வர் அவர்கள், தாங்கள் வழங்கிய புத்தகங்கள் அனைத்தையும் அவ சியம் படிப்பேன்; தாங்கள் வழங்கிய பேனாவால் கையழுத்து இடுவேன் என்று தெரிவித்ததோடு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், கழக பொறுப்பாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
தஞ்சை புதிய மாவட்ட ஆட்சியருக்கு கழகப் பொறுப்பாளர்கள் இயக்க வெளியீடுகளை வழங்கி வாழ்த்து!
Leave a Comment