நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு
சென்னை, ஜூலை 5 தி.மு.க. சட்டத்துறைச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, அறிக்கை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் – மாநில சுயாட்சிக்கும் – மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக” மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சட்டத்துறையின் சார்பில், தி.மு.க.சட்டத்துறைச் செய லாளரும் மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, தலைமையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க.சட்டத்துறைத் தலைவர், மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை, சட்டத்துறை இணைச் செயலாளர், இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் – சட்டத்துறை இணைச் செயலாளர் மேனாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.இரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையில் – தி.மு.கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்திட – ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம், – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் .கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலக்குழு செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயக் கட்சித் தலைவர் திரு. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி.., தி.மு.கழக சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்குரைஞர் இரா.கிரிராஜன் எம்.பி., ஆகியோர் சிறப்புரையாற்றிட – தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அவர்கள் நிறைவுரையாற்றிட – சட்டத்துறை துணைச் செயலாளர்கள் ஜே.பச்சையப்பன், கே.சந்துரு ஆகியோர் நன்றியுரை ஆற்றிட – தி.மு.க. சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் தலைமைக் கழக வழக்குரைஞர்கள், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குரைஞர் அணி அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்; வருகிற 06.07.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் “மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்” நடைபெற உள்ளது.
இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் – கழக வழக்கறிஞர்கள் மற்றும் கழக முன்னணியினர் – தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பாசிச ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.