ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 24- மத்தியத் துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், மாநிலங்களே தங்களுக்கான பிரத்யேக நடைமுறைகள் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மிக மோசமான ஊழல் முறைகேடுகள்!

அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் மிக மோசமான விதத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதை அறியும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மிகுந்த வேத னையை அடைந்துள்ளது.

நீட்-இளங்கலை (NEET-UG) தேர்வாக இருந்தாலும் சரி, பல்கலைக் கழக ஆணையத்தின் ‘நெட்’ (UGC-NET) தேர்வாக இருந்தாலும் சரி, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள நீட்-முதுகலை (NEET-PG) தேர்வாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ஊழல் கள் நடைபெற்றுள்ளது வெளிச்சத் திற்கு வந்ததன் காரணமாக அனைத்தும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டி ருக்கின்றன.

இவற்றில் நடைபெற்றுள்ள ஒழுங்கீனங் களின் விளைவாக நாட்டின் உயர்கல்வித் துறையின் கேந்திரமான துறைகளின் செயல்முறைகள் கடுமையாக பாதிப்பு க்கு உள்ளாகி இருக்கின்றன.

தேசியக் கல்விக் கொள்கையின்
அங்கமே வணிகமயமாக்கல்!

இவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று முதல்நோக்கிலேயே நிறுவப் பட்டிருப்பது மட்டுமல்ல, கல்வித்துறை யில் மத்தியமயமாக்கல், வணிகமய மாக்கல் மற்றும் வகுப்புவாதமயமாக்கல் ஆகியவை தான் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியமான மூலக் கூறுமாக உள்ளன.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஒன்றிய அரசாங்கம் இந்த ஊழல்கள் குறித்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஅய்) விசாரிக்க வேண்டும் என்று அதற்குக் கட்டளையிட்டிருப்பது, ‘வியாபம்’ ஊழலை மூடி மறைத் ததைப்போல இதனையும் மூடிமறைப்ப தற்கான அணுகுமுறையே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இவை உயர்கல்வியின் கொள்கைகளில் ஒன்றிய அரசாங்கம் முற்றிலுமாக சரிவை சந்தித்தி ருக்கிறது என்பதன் பிரதிபலிப்பேயாகும்.

ஒன்றிய கல்வியமைச்சர்
பதவி விலக வேண்டும்

இதற்கு இந்த அரசாங்கம் முழுமை யாக, குறிப்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும்.
மிகவும் பெரிய அளவிலும் பன்மைத் தன்மைகள் நிறைந்தும் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் உயர்கல்வித்துறையை மத்தியத்துவம் செய்தியிருப்பதை மீண்டும் மாற்றி யமைத்திட வேண்டும்.

இந்தியா போன்ற பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் உயர்கல்வி நிர்வாகத்தை மய்யப் படுத்துவதை மாற்றியமைக்க வேண்டும்.

முதல் படியாக மய்யப்படுத்தப்பட்ட நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழிற்கல்வி (professional) நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை யை ஒழுங்குபடுத்துவதற்கும் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கும் அவற்றின் சொந்த நடைமுறைகளை அனுமதிக்க வேண்டும்.

– இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *