எங்களை அழிக்க நினைத்த பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டோம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஜூன் 21- மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான சிவசேனா தனியாகவும், முன்னாள் முதல்வரும், பால் தாக்கரே மகனுமான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தனியாகவும் கட்சியின் துவக்க நாளை கொண்டாடின.

இதில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, “எங்களை அழிக்க நினைத்த பா.ஜ.க-வுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டோம். சிவசேனாவின் பெயர், வில் அம்பு சின்னம், எனது தந்தை பால் தாக்கரேயின் படம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுங்கள். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். மக்களவை தேர்தலில் பால் தாக்கரேயின் உண்மையான வாரிசு யார் என்பதை மக்கள் காட்டியுள்ளனர். மகா ராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வந்து தேர்தல் பிரசாரம் செய்ய துணிச்சல் இருக் கிறதா? நாங்கள் பா.ஜ.க தலைமையிலான கூட்ட ணியில் சேருவோம் என்று திட்டமிட்டு வதந்தியை பரப்பி விடுகின்றனர்.

எங்கள் முதுகில் குத்தி, எங்களை அழிக்க நினைத்தவர்களுடன் எப்படி கூட்டணி வைப்போம். பா.ஜ.க-வின் இந்துத்துவா கொள்கை பிற் போக்குத்தனமானது. ஆனால் எங்களது இந்துத்துவா கொள்கை முற்போக்கானது. நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்து உண்மையான இந்துத்துவா கொள் கையை பா.ஜ.க தூக்கி எறிந்துள்ளது.

நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு மற்றும் அரசியலமைப்பை பா.ஜ.க சேதப்படுத்த முயன்றதால்தான் நாங்கள் பா.ஜ.க தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மாறினோம்.
நரேந்திர மோடி அமைச்சரவையில் மிகவும் மோசமாக செயல்பட்ட புபேந்திர யாதவ் மற்றும் அஸ்வினி ஆகியோரை மகாராஷ்டிரா தேர்தல் பார்வையாளர்களாக பா.ஜ.க அனுப்பி இருக்கிறது. மக்க ளவை தேர்தலில் கிடைத்த வெற்றியை மகாராஷ்டிரா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். சட்டமேலவை தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மக்களவை தேர்தலில் பா.ஜ.க-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த ராஜ் தாக்கரேயையும் உத்தவ் தாக்கரே மறைமுகமாக சாடினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *