மோடியின் தியானம் முடிந்து.. கண்ணை திறந்ததும் இதுதான் நடக்கும்! அடித்து சொல்லும் பிரசாந்த் பூஷன்

2 Min Read

கன்னியாகுமரி, ஜூன் 1 பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் குறித்து தீவிரமான கருத்துகளை மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் பட்சத்தில் முதல் சிக்கல் யாருக்கு ஏற்படும் என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மோடிக்கு ஆதர வாக இருக்கும் Godi மீடியா என்று அழைக்கப்படும் வட இந்திய ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜூன் 4-க்கு பிறகு, Godi மீடியாக்களும், அதன் தொகுப்பா ளர்களும், ஆசிரியர்களும் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்க நேரிடும். ஒருமைப்பாட்டின் உட்கருத்தை அவர்கள் எப்போதோ சிதைத்துவிட்டனர். தேர்தல் முடிவிற்குப் பிறகு அவர்களின் அதிகாரமும், பணமும் சேர்ந்து சிதைய இருக்கிறது. தோல்வியை உணர்ந்து விட்டது. அதனால்தான் பல துறைகளுக்கு அவசர அவசரமாக பணி நீட்டிப்பு செய்கிறது. அவசர அவசரமாக நியமனங்களை மேற்கொள்கிறது. தோல்வி வரப்போவதை உணர்ந்தே பாஜக இப்படி செய்கிறது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். அதில், 30 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் முடிந்த தும் மோடியின் கடைசி தேர்தல் பிரச்சார உத்தி இந்த தியானத்தில் இருந்து ஆரம்பமாகும். அங்கே ஒளிப்படக் கருவிகள் மட்டுமே இருக்கும். 2 ஆயிரம் வீரர்கள் கொண்ட காவல் படை அவரைப் பாதுகாக்கும். அப்பகுதி முழுவதும் மக்கள் நுழையாத வண்ணம் தடுக்கப்படு வார்கள். இப்போது கேள்வி என்னவென்றால், தியானம் முடிந்ததும் பையை எடுத்து கொண்டு போவதை பற்றி யோசிப்பாரா? அல்லது புதிய அரசாங்கத்தை எப்படி சட்டத்தின் விதிகளை மீறி உருவாக்கலாம் என்பதை பற்றி சிந்திப்பாரா? என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கிண்டல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலை யில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியா குமரியில் இரண்டு நாள்கள் தியானம் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் (30.5.2024) தமிழ்நாடு வந்த மோடி, குமரி யில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கி உள்ளார். கடந்த முறை 2019 மக்களவைத் தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார். அதேபோல் இந்த முறையும் தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சாரம் முடிந்த பின்பும் கூட இறுதி கட்ட ஏழாம் கட்ட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்கிறார். விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி இந்தத் தியானம் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய உள்ளார். 48 மணி நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் அவர் விடாமல் தியானம் செய்வார். தூங்க, குளிக்க மட்டும் பிரேக் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *