புதுடில்லி, மே 22- நாடு முழுவ தும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தலை நகர் டில்லியை பொறுத்தவரை வரும் மே 25ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இம்முறை ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘இந் தியா’ கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன.
டில்லியை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளி லும், காங்கிரஸ் கட்சி 3 தொகு திகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இம்முறை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வாக்குள்ள தொகுதியில் ஆம் ஆத்மி வேட் பாளர் களம் காண்கிறார்.
அதேபோல, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவா லுக்கு வாக்குள்ள தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களம் காண்கிறார். டில்லியில் நடை பெற்ற இந்தியா கூட்டணி தேர் தல் பிரச்சார கூட்டத்தில் இதை சுட்டிக் காட்டி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அவர் தனது பிரச்சார கூட்டத்தில் கூறியதாவது:
“இந்த தேர்தலில் கெஜ்ரிவால் காங்கிரஸ் பட்டனை அழுத்தி வாக்கு செலுத்தவுள்ளார். நான் ஆம் ஆத்மி பட்டனை அழுத்தி அந்த வேட்பாளருக்கு வாக்களிக் கப் போகிறேன்.
எங்கள் கூட்டணியின் ஒற் றுமையை நீங்கள் இதில் இருந்தே அறிந்து கொள்ளலாம். பிரதமர் மோடி தனக்கு விருப்ப மான ஊடகவியலாளர்களுக்கு விடாமல் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். ஆனால் என்னிடம் விவாதம் மேற் கொள்ள அவர் தயாராக இல்லை. அவர் என்னிடம் விவாதம் மேற்கொண்டால் இரு கேள்விகளை நிச்சயம் கேட் பேன்.
முதலில் அவருக்கும் அதா னிக்கும் என்ன தொடர்பு என்று கேட்பேன். இரண்டாவதாக தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து கேட்பேன். ஆனால், பிரதமர் மோடி என்னிடம் விவாதம் மேற்கொள்ள வரமாட்டார்.” இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
எனது ஓட்டு ஆம் ஆத்மிக்கு… பிரதமர் மோடிக்கு இரு கேள்விகள் – ராகுல் பிரச்சாரம்
Leave a Comment