ஒரே நாடு – ஒரே தேர்தல் ஜனநாயக விரோதமானது

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சீத்தாராம் யெச்சூரி விளக்கம்

அரசியல்

மும்பை, செப்.4- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற  மோடி அரசின் நகர்வு முற்றிலும் ஜனநாயக விரோ தமானது; நடைமுறை சாத்தியமில் லாதது; ஏராளமான குழப்பங்க ளுக்கு இட்டுச் செல்லக்கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள் ளார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற  கருத்தினை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு அரசியல் களத்தில் விதைத்துள்ளது. மோடி அரசின் இந்த ஆபத்தான நகர்வுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளன. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற கலந்து ரையாடல் நிகழ்ச்சி யில் பங்கேற்ற சீத்தாராம் யெச்சூரி, “ஒன்றிய மோடி அரசு, ஒரே நாடு  ஒரே தேர்தல் என்ற கருத்தினை செயல் படுத்துவதற்கு திட்டமிட்டிருப்ப தாக தெரிகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட் டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், அக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் என்னவென்று இதுவரை அறிவிக் கப்படவில்லை; அதற்கு முன்பே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட் டத்தை செயல்படுத்துவது தொடர் பாக ஆராய்வதற்கு ஒரு குழு அமைத் திருப்பது மற்றும் ஆளும் அரசுத் தரப்பிலிருந்து அதற்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பரப்பு வது என்பது, இத்திட்டத்தை செயல்படுத்தும் அரசின்  நோக்கத் தையே பிரதிபலிக்கிறது. இந்தியா போன்ற நாட்டில் இத்திட்டம் நடைமுறை சாத்தியமில்லாதது” என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: இந்திய நாட்டில் அனைத்து மாநி லங்களிலுமே ஒரு தனிப்பட்ட கட்சி மிகப்பெரும் பெரும்பான்மை யுடன் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவது என்பது கிட்டத்தட்ட பழைய கதை யாகிவிட்டது. இந்த நிலையில், தேர்தலின் போது தொங்கு நாடாளுமன்றம், தொங்கு சட்டமன்றம் அமைந்தாலோ அல் லது ஒரு தனிக்கட்சி பெரும்பான் மை பெற முடியாமல் போனாலோ, இவர்கள் சொல்லும் திட்டத்தின் படி மிகப்பெரிய பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்படும். ஒரு கட்சி, கொள்கைப் பிரச்சினை காரணமா கவோ அல்லது இதர காரணங் களுக்கோ அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டால், அதற்கு பிறகு அடுத்த தேர்தல் நடைபெறும் வரை, எந்தக் கூட்டணியிலும் இணைய முடியாமல் அல்லது தங் களது கொள்கைக்கு பொருத்த மான அணி சேர்க்கையை மேற் கொள்ள முடியாமல் தனித்தே நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.  

சில தருணங்களில் ஆதரவளிக் கும் கட்சி திரும்பப் பெறும்நிலை யில், ஆட்சிக்கவிழுமானால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படுமா அல்லது பெரும்பான்மையை இழந்த அர சாங்கமே அடுத்த தேர்தல் வரை அதிகாரத்தில் நீடிக்குமா என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன.

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடி யும். ஆனால் மேலே குறிப்பிட் டது போன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில், அடுத்த தேர்தலுக்கான காலம் வரை காத்திருங்கள் என்று கூறி ஒன்றியத்தில் ஆளும் கட்சியே மாநிலத்தின் அதிகாரத்தை குடிய ரசுத் தலைவர் ஆட்சி  மூலமாக தனது கைகளில் எடுத்துக் கொள் ளும் மிகப்பெரும் ஆபத்துக்கள் அடங்கியுள்ளன.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் செலவினங்களை குறைப்பதற்காக முன்வைக்கப்படு கிறது என்ற  ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப் பட வேண்டி யது ஆகும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.  

இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றங்களில் ஒரு அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட் டது, ஆட்சியில் தொடர்வது என் பது சட்டவிரோதமானது. அதே போல, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கி, ஒரு தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பெற்றிருப்பதற்கான மக்களின் உரிமையை மறுப்பது என்பது ஜனநாயக விரோத மானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *