என்னுடைய கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் பதில் அளிக்க முடியாது எனவே நேரில் விவாதிக்க தயங்குகிறார் : ராகுல் காந்தி பேச்சு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ரேபரேலி, மே 19 உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சோனியா வுடன் பங்கேற்ற ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-
தேர்தல் பிரச்சாரங்களில் நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி பெயரை மோடியால் சொல்லாமல் இருக்க முடியாது என்று நான் சமீபத்தில் பேசினேன்.

2 நாட்கள் கழித்து அதானி, அம்பானி பற்றி மோடி பேசினார். நான் என்னவெல்லாம் பேசு கிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி காப்பி அடித்து பேசுகிறார்.
இதில் என்ன தெரிகிறது? என் னால் அவரை எந்த விடயத்திலும், எப்படியும் பேச வைக்க முடியும்.
நீங்களும் பிரதமர் மோடி ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதை நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் பிரச்சார மேடைகளில் பேசுகிறேன். அதை அடுத்த நாளே பிரதமர் மோடி எடுத்து பேசுவார்.

மோடி பிரச்சாரங்களில் இப்போது இதுதான் நடக்கிறது. புதிதாக அவர்கள் எதுவும் சொல்வது இல்லை.
இன்று இங்கு பேசிய எனது தாயார் ரேபரேலி தொகுதியை என்வசம் ஒப்படைத்து இருப்ப தாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும்.

பாரம்பரியமிக்க ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கை யுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெரு மையுடன் நான் இதை சொல் கிறேன். எனது தாயின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் வாக்குறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டு மக்களுக்காக உழைக்க 20 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த இந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை ஏமாற்ற மாட் டேன்.
இவ்வாறு ராகுல் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *