புவனேஸ்வர், மே 19- இதற்கிடையே ஒட்டு மொத்த மக்களும் பா.ஜ.க.வை நிராகரித் துள்ளதால் ஒன்றியத் தில் இந்தியா கூட் டணி ஆட்சி அமைவதுஉறுதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவ னேஸ்வரில் செய்தியாளர் களிடம் பேசிய மல்லிகார் ஜுன கார்கே, ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்தின் 24 ஆண்டுகால ஆட் சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டதாக கூறினார். இந்த மக்க ளவை தேர்தல் ஒரு பக்கம் நாட்டு மக்களுக்கும், மறு புறம் மோடி அரசுக்கும் இடையிலான யுத்தம் என்றார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநி லங்களில் பா.ஜ.க.வுக்கு அடித்தளம் இல்லை, இதேபோல், நாட்டின் மற்ற பகுதிகளிலும் 10 ஆண்டு கால ஒன்றிய அரசின் தவறான ஆட்சி யால் மக்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ள தாக விமர்சித்தார்.
மக்கள் பிளவுப்படுத் தும் பிரதமர், வெறுப் புணர்வைத் தூண்டும் பேச்சுகளை மீண்டும் மீண்டும் பேசி வருவதாக சாடினார்.
ஒவ்வொரு இந்திய ரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபா சிட் செய்யப்படும் போன்ற எந்த ஒரு வாக் குறுதிகளையும் நிறை வேற்றாததால் மக்கள் பா.ஜ.க.வை முற்றிலும் நிராகரித்துள்ளதால், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமை வது உறுதி என மல்லிகார் ஜுன கார்கே தெரிவித்தார்.