பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

எச்.வி.எப் விஜயந்தா மாடல்சென்னை, மே 15- எச்.வி.எப் விஜ யந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நடவடிக்கை யால் முறியடிக்கப்பட்டது. தற் போது, விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.
ஆவடியில் பாதுகாப்புத் துறைக்கு தேவையான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சி செய்தபோது அதற்கு ஆவடி மக்கள் தாமாக முன் வந்து எச்.வி.எப் தொழிற் சாலைக்கு தேவையான நிலங்களை வழங்கி னர். அதற்கு கைமாறாக எச்.வி.எப் நிர்வாகம் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஆவடி சுற்று வட்டாரப் பகுதி குழந்தைகள் படிப்பதற்காக கல்விக்கூடங்களை உருவாக்கியது.

அதில் முக்கியமானது ஆங்கில வழிக் கல்வி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் விஜயந்தா சீனியர் செகண்டரி பள்ளியும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் விஜயந்தா மாடல் பள்ளியும் நிறுவப்பட்டது. தற்போது மாநில பாடத்தின் கீழ் இயங்கும் விஜயந்தா மாடல் பள் ளியை மூட 11ஆம் வகுப்பு சேர்க் கைக்கான விண்ணப்பப் படி வத்தை தர பள்ளி நிர்வாகம் மறுத் துள்ளதாக அறிக்கை வெளியிட் டது. அதில், மாநில பாடத் திட்டத்தில் உள்ள மாடல் பள்ளியை சிபிஎஸ்இ பாடத்திற்கு மாற்றுவதாகவும் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டத்தை கை விடுவ தாகவும் தெரிவித்திருந்தனர்.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் இந் தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் ஒன்றிய மற்றும் மாநில அரசுத் துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். இப்படி சாதனை படைத்து வரும் பள்ளியை ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு விஜயந்தா மாடல் பள்ளி நிர்வாகம் சதித் திட்டத்தில் ஈடுபட்டது.

மேலும் கடந்த ஆண்டு மாடல் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டித் தருகிறேன் என்று மாண வர்களிடம் கட்டட நிதியை மாடல் பள்ளி நிர்வாகம் வசூல் செய்தது. ஆனால் புதிய வகுப் பறைகள் ஏதும் கட்டாமல் வசூல் செய்யப்பட்ட நிதியில் சுமார் ரூ.30 லட்சத்தை இந்த நிர்வாகம் கையா டல் செய்து வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருப்பதாக ஆவடி எச்.வி.எப் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் குற்றம் சாட்டி யுள்ளது. இந்த மோசடியை மறைக்கவே மாடல் பள்ளியை மூடுகின்ற சதியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டது.
இதுதொடர்பாக ஆவடி எச்விஎப் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தினர், சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தமிழர்களுக்கு எதி ரான இந்தப் போக்கை உடனடி யாக கைவிட்டு மீண்டும் மாடல் பள்ளியை மாநில பாடத் திட்டத் தில் மாணவர்கள் பயில 11ஆம் வகுப்பு சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் கவனத்திற்கு நாசர் கொண்டு சென்றார்.

கல்வித்துறை அமைச்சர் உடன டியாக சம்பந்தப்பட்ட அதிகாரி களை தொடர்பு கொண்டு விஜ யந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியை மீண்டும் நடை முறைபடுத்த உத்தரவிட்டார்.
தற்போது மீண்டும் விஜயந்தா மாடல் பள்ளியில் விண்ணப்ப படி வங்கள் விநியோகம் செய்யப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் ஆவடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட தொகுதி மக்கள் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகே ஷுக்கும் நன்றியை தெரிவித்தனர். பள்ளி தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு முறியடிப்பு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *