போபால், மே.7- பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் அரச மைப்பு சட் டத்தை மாற்ற விரும்புவதாகவும், அதைக் காப்பாற்றவே இந்த தேர்தல் நடத்தப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (6.5.2024) மத்தியப் பிரதேசத் தின் ரட்லம்-ஜபுவா தொகுதியில் பிரச்சாரம் மேற் கொண்டார். அலிராஜ் பூர் மாவட்டத்தின் ஜோபட் நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜனதாவை கடுமை யாக விமர்சித்தார்.
தனது உரையில் அவர் கூறியதாவது:-
ஒன்றியத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தால் மக்கள் நலன்கருதி இட ஒதுக்கீடு உச்ச வரம்பு 50 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கப்படும்.
நாடு முழுவதும் ஜாதி வாரி கணக் கெடுப்பு நடத்தப் படும். இது மக்களின் நிலை யைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத் தும். நாட்டின் அரசியலின் திசையையும் மாற்றும்.
நாட்டின் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கவே இந்த தேர்தல் நடத்தப்படு கிறது. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் அதை மாற்றுவ தற்கு விரும்புகின்றன. ஆனால் காங்கிரசும், இந்தியா கூட் டணி கட்சிகளும் அரசியல் சாசனத்தை பாதுகாக்க முயற்சிக்கின்றன.
பா.ஜனதாவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது அரசமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் என்ற முழக்கத்தை பா.ஜனதாவினர் வைக்கின்றனர்.
ஆனால் 400 இடங்களை விடுங்கள், இந்த முறை பா.ஜனதாவினர் 150 தொகு திகளுக்கு மேல் பெற மாட்டார்கள்.
கம்பெனிகளில் இளை ஞர்கள் ஓராண்டு பழகுநர் பயிற்சி பெற்று பின்னர் வேலை கிடைக்க வகை செய்யும் முதல் வேலை உறுதி திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வரும்.
இந்த பயிற்சி காலத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஆகும். இதைப்போல ஏழைப்பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்காக மாதந்தோறும் அவர் களது வங்கி கணக்கில் ரூ.8,500 செலுத்தப்படும். இதுவும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஆகும்.
-இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.