மணிப்பூர் மீது பிரதமருக்கு அக்கறை, இரக்கமில்லை! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, மே 5- காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பதிவில், ‘‘மணிப்பூர் சரியாக 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பற்றி எரியத்தொடங்கியது. ஒரு ஆண்டு ஆகிறது. அக்கறையற்ற மோடி அரசு மற்றும் திறமையற்ற பா.ஜ. அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளன. இரக்கமில்லாத பிரதமர் மோடி மாநிலத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை. இது அவரது தகுதியின்மை மற்றும் முழு அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஈகோ ஓர் அழகான மாநிலத்தின் சமூக கட்ட மைப்பை சேதப்படுத்தியுள்ளது. மணிப் பூரில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பா.ஜ. எவ்வாறு தங்களது வாழ்க்கையை துயர்மிகுந்ததாக மாற்றியது என்பது இப்போது தெரியவரும். மணிப்பூரில் தாங்கள் அழித்த எண்ணற்ற உயிர்கள் குறித்து பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் துளிகூட அனுதாபம் இல்லை என்பதை இந்திய மக்கள் இப் போது அறிந்து கொள்வார்கள். பா.ஜ.வால் மணிப்பூரின் இயல்பு நிலை, அமைதி பறிக் கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள் ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *