எவர் சொல்வது உண்மை?

viduthalai
1 Min Read

பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குலத் தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை.

– அசாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா
(“இந்து தமிழ் திசை – 9.4.2024 – பக்கம் 11 )

சீனாவிடம் கேட்கிறேன், “அண்டை நாட்டு மாகாணங்களின் பெயர்களை நாங்கள் மாற்றினால் அந்தப் பகுதிகள் எங்களுக்குச் சொந்தமானது ஆகுமா? இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியா – சீனா இடையிலான உறவு தான் கெடும்.” ஒன்றிய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்.

( ‘தினமலர்’ – 9.4.2024 – பக்கம் 10 )

சீன ஆக்கிரமிப்பு அறவே இல்லை என்கிறார் உள் துறை அமைச்சர்.
ஆக்ரமிப்பை மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார் இராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்.
குறிப்பு: 2000 சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பை (அருணாசலப் பிரதேசம்) சீனா ஆக்ரமித்துள்ள தகவலை மறைப்பது ஏன்? அட கோயபல்சுகளா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *