கிருட்டினகிரி ஏப். 4- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் மற் றும் மாவட்ட திராவிடர் கழக புதிய நிர் வாகிகள் அறிமுக கூட்டம் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்ட அரங்கில்-31.3.2024- ஞாயிறு மாலை 4 மணியளவில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார், மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரை யும் வரவேற்றுப் பேசினார், பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், மாவட்டத் துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மாவட் டத் துணைச் செயலாளர் தி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
கிருட்டினகிரி மாவட்ட புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்தும், தஞ்சை பொதுக்குழு தீர்மானங்களை விளக்கியும் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் புதிய நிர்வாகி களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தும் பழைய நிர்வாகிகளின் இயக்க பணிகளுக்கு நன்றியை தெரிவித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது உடல் நலனையும் பொருட்படுத் தாமல் தனது 91-வயதிலும் தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதை விளக்கியும் வருகின்ற 8-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் அரூருக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை வரவேற்க கிருட்டினகிரி மாவட்டக் கழகத் தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
கிருட்டினகிரி பெரியார் மய்யத்திலுள்ள அறிவுலக ஆசான் தந்தைபெரியார் சிலைக்கு திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் கழகத் தோழர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். (31-03-2024).
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா. சரவணன், விடுதலை நாளேட்டின் முக்கியத்துவம் குறித்தும் அனைவரும் அவசியம் விடு தலையை வாங்கி படிக்க வேண்டும் என்றும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி கருத்துரையாற்றினார்-
மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளரும் திராவிடர் கழக புரவலருமான கிருட்டினகிரி வெ.நாரா யணமூர்த்தி புதிய நிர்வாகிகளுக்கும் பழைய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை யும் பாராட்டுகளையும் தெரிவித்து இயக் கத்தின் மூத்த முன்னோடிகள் சுயமரியா தைச் சுடரொளிகள் தா.திருப்பதி, மு.தியா கராசன் ஆகியோரது இயக்க குடும்ப பாச பணிகளை நினைவுகூர்ந்து பேசினார்.
கூட்டத்தில் ஒன்றியத்தலைவர்கள் மத்தூர் கி.முருகேசன், கிருட்டினகிரி த.மாது, காவேரிப்பட்டணம் பெ.செல்வம், பர்கூர் மே.மாரப்பன், ஒன்றியச் செயலா ளர்கள் காவேரிப்பட்டணம் பெ. செல் வேந்திரன், கிருட்டினகிரி கி.வேலன், மத்தூர் நகரத் தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து இராசேசன், துணைத் தலைவர் வே.புகழேந்தி, துணைச் செயலாளர்
பூ. இராசேந்திரபாபு, மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், செயலாளர் அ.வெங்கடாசலம், ப.க.நிர் வாகிகள் இராம.சகாதேவன், மா.சகுந் தலா, க.வெங்கடேசன், மா.சிவசங்கர், இரா.பழனி, மா.சீவரத்தினம், மு.வேடியப் பன், செ.ப.மூர்த்தி, காவேரிப்பட்டணம் மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், கீழ்குப்பம் ப.தமிழரசு, இல.குமார், மத்தூர் துணைத்தலைவர் சா.தனஞ்செயன், தி.அன்பு, தருமபுரி அம்ஜத் பாஷா, மக்கள் அதிகாரம் அருண், பெரியார் பிஞ்சுகள் செ.வீரபாண்டி, மா.அறிவுச் செல்வன், மா.அன்புச் செல்வன் உள்பட கழகத் தோழர்கள் பங்கேற்று கருத்துரை வழங் கினர். நிறைவாக மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.
கூட்டம் துவங்கும் முன்னதாக கிருட் டினகிரி மாவட்ட திராவிடர் கழக புதிய நிர்வாகிகள் பெரியார் மய்யத்திலுள்ள அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில் மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திராவிடர் கழக செயலவைத் தலை வராக சிறப்பாக பணியாற்றிய தலைச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான கடலூர் சு.அறிவுக்கரசு அவர்கள் மறை விற்கும், கிருட்டினகிரி மாவட்ட மேனாள் துணைத்தலைவராக பணியாற்றிய புழல். ஏழுமலை மறைவிற்கும் கிருட்டினகிரி மாவட்டத் திராவிடர் கழகம் ஆழ்ந்த துயரத்தையும், அவர்களது அளிப்பரிய தொண்டுக்கு வீரவணக்கத் தையும் இம்மாவட்ட கூட்டம் தெரிவித் துக் கொள்கிறது.
கடந்த 25.03.2024 – அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஒரு மனதாக ஏற்று சிறப்பாக செயல்படுத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.
கிருட்டினகிரி நாடாளுமன்ற தேர்த லில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் அவர்களை அதிகப்படி யான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற மாவட்ட திராவிடர் கழகம் பிரச்சாரப் களப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட் டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித் தும் – கடந்த பந்தாண்டுகால மதவெறி பாசிச மக்கள் விரோத பா.ஜ.க. ஒன்றிய மோடி அரசின் பித்தலாட்டங்களை மக்கள் மன்றத்தில் (தேர்தல் பரப்புரை) எடுத்து நாடு முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்ற 08.04.2024- அன்று தருமபுரி மாவட்டம் அரூர் தேர் தல் பரப்புரைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கிருட் டினகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
கிருட்டினகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் காங்கிரஸ் கே.கோபிநாத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரைக்கு வருகை தரும் திரா விடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனியை வரவேற்று பிரச்சாரக் கூட்டத்தில் திரளாக கழகத்தோழர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கபடுகிறது.
புதிய நிர்வாகிகள்
நியமனம்:
மாவட்டத் துணைச் செயலாளர்
சி.சீனிவாசன்,
மாவட்ட விவசாய அணி தலைவர் –
இல. ஆறுமுகம், செயலாளர்- ப.தமிழரசு,
மாவட்ட தொழிலாளரணி தலைவர்
சி.வெங்கடாசலம்,
பருகூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் மே. மாரப்பன், செயலாளர் ப.பிரதாப்.,
ஊற்றங்கரை ஒன்றிய கழகம் – தலைவர் அண்ணா அப்பாசாமி, செயலாளர் செ.சிவராஜ், கிருட்டினகிரி நகர கழகத் தலைவர் கோ.தங்க ராசன், செயலாளர் ஆட்டோ அ.கோ.இராசா ஆகியோரை மாவட்ட கழக பரிந்துரையுடன் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் அறிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் கிருட்டினகிரி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்
த.மாது அவர்களின் மூத்தமகன் பெரியார் பிஞ்சு மா.அன்புச் செல்வன் 13ஆ-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி தலைமைக் கழக அமைப்பாளர், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி அனை வருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் மா.அன்புச் செல்வனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார்.