சென்னையில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

சென்னை, செப்.22 வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

 சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பொதுவாக பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கூறினார். 

இந்த வாரத்தில் சென்னையில் சாலைப் பணிகளை ஆய்வு நடத்தவுள்ளேன். சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளேன். சாலைப் பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணி களை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்று கண்டிப்போடு கூறினார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கள ஆய்வுப் பணியில் இறங்கினார். அவர், சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் ராம் நகர் 7ஆ-வது குறுக்கு தெரு, 3ஆ-வது பிரதான சாலை மேற்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதிகளில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மணப் பாக்கம்- கவுப்பாக்கம் – கிருகம்பாக்கம் சாலையில் ரூ.4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், ராமா புரம் திருவள்ளுவர் சாலையில் ரூ.2 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரம் மதிப் பீட்டில் முடிவுற்ற சாலைப் பணிகளை யும் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு பணிகள் நிலை குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வளசரவாக்கம் முதல் வடபழனி சிக்னல் வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப் போது, அப்பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் அமைந்துள்ள சாலைப் பணிகளை சீர்செய்திடவும், காலதாமதமில்லாமல் விரைந்து முடித்திட வேண்டும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஒருங்கிணைப்பு பணி

ரூ.7.14 கோடி மதிப்பீட்டிலான சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும். நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை, மின் வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் அலுவ லர்களுடன் ஒருங்கிணைந்து பணி யாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.’ என்று அதி காரிகளை அறிவுறுத்தினார்.

மெட்ரோ ரயில் பணிகள்

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில், சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.  

இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் பணிகளை போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *