தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்?

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கேள்வி: சமீபத்தில் வெளியாகியுள்ள தேர்தல் பத்திர விவரங்களால், பா.ஜ.க.வுக்குக் கெட்ட பெயர் வந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பிரதமர் மோடி பதில்: எனக்குப் பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் – என்று கொஞ்சம் சொல்லுங்கள்.
இன்று மோடி தேர்தல் பத்திரங்களை உருவாக்கி யுள்ளார். அதனால்தான் உங்களால் அதைப்பற்றித் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது; யார் வாங்கினார்கள் என்பதை எல்லாம் உங்களால் அறிய முடியும். இல்லையென்றால், யாருக்குப் பணம், எங்கிருந்து வந்தது எனத் தெரியாது.

– ‘தினத்தந்தி’, 1.4.2024, பக்கம் 3

நமது பதிலடி: ‘‘அந்த வீட்டில் ஏன் திருடினாய்” என்று காவல்துறை கேட்டால், நான் திருடியதால் தானே அந்த வீட்டில் என்னென்ன நகைகள் இருந் தன என்பது தெரிய வந்தது என்று சொன்னால், எப்படி இருக்கும் – அதைப் போல் அல்லவா இருக்கிறது மோடிஜியின் பதில்.
தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று கேட்டால், ‘‘புல் பிடுங்க” என்று பதில் சொன்னாராம் – இதையும் மோடியின் பதிலில் சேர்த்துக் கொள்ள லாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *