புதுடில்லி,மார்ச் 20- டில்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் சஞ்சய் சிங், டில்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப் பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது எம்.பி. பதவி கடந்த ஜனவரி மாதம் முடிவடைய இருந்த நிலை யில், மீண்டும் மாநிலங்க ளவை உறுப்பினராக தேர்வானார். இதை யடுத்து, எம்.பி.யாக பதவி யேற்க அனுமதி கோரி டில்லி சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசா ரித்த நீதிபதி எம்.கே.நாக்பால் சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள அனுமதி வழங்கி உள் ளார். இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத் தரவில் கூறியிருப்ப தாவது:
சஞ்சய் சிங் மாநிலங்க ளவை உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படு கிறது. அவரை பாதுகாப் பாக நாடாளுமன்றம் அழைத்து செல்வதற் கான ஏற்பாடுகளை சிறை கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும்.
பதவியேற்றுக் கொண்ட பிறகு அவரை பத்திரமாக சிறைக்கு மீண்டும் அழைத்து வர வேண்டும்.
பேட்டி அளிக்கவோ பொதுக் கூட்டத்தில் பேசவோ அனுமதிக்கக் கூடாது. மேலும் சஞ்சய் சிங் மீதான வழக்கு விசா ரணைக்கு வருகிறது. அப் போது அவர் நேரில் ஆஜ ராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
டில்லி திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் எம்.பி.யாக பதவி ஏற்க உயர்நீதிமன்றம் அனுமதி
Leave a Comment