கோர்பா, பிப் 13 சட்டீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நீதி நடைப் பயணம் நடந்து வருகின்றது.
நடைப் பயணத்தின்போது நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது, பொதுமக்களின் பாக் கெட்டுக்கள் கொள்ளையடிக்கப்படு கின்றது. அவர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். எனவே பொது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர் மற்றும் பழங்குடியினர் நாட் டின் மக்கள் தொகையில் 74 சதவீதம் இருக்கின்றனர்.
ஆனால் இந்த சமூகங்களை சேர்ந்த ஒருவர் கூட நாட்டில் உள்ள முன்னணி 200 நிறுவனங்களின் நிர்வாகத்தின் உரிமையாளராக இல்லை. பாஜ இந்து ராஷ்டிரா என்று கூறுகின்றது. ஆனால் இந்த 74 சதவீதம் பேர் மற்றும் ஏழைகள் நாட்டில் இருந்து எதனையும் பெற வில்லை. ராமன் கோயில் திறப்பு விழாவில் ஏழைகள், தொழிலாளிகள், வேலையில்லாதவர்கள் அல்லது சிறு வணிகர்களை நீங்கள் பார்த்தீர்களா? அதானி ஜீ, அம்பானி ஜீ, அமிதாப் பச்சன், அய்ஸ்வர்யா ராய் மற்றும் இதர மிகப்பெரிய தொழிலதிபர்களை தான் நான் பார்த்தேன். அவர்களது குடும்பத் தினர் மிகப்பெரிய அறிக்கைகளை கொடுத்தனர். மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பணவீக்கத் தின் சீற்றத்தை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் அதானியும், அம்பானி யும் சீன பொருட்களை விற்று லாபம் ஈட்டுகிறார்கள். இது பொருளாதார அநீதி. மக்களின் ஆதரவோடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்” என்றார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் நீதி நடைப் பயணமானது சட்டீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து தோடிபாரா வழியாக நேற்று (12.2.2024) காட்க்கோரா நோக்கி சென்று கொண் டிருந்தது. அப்போது காவி தலைப் பாகை அணிந்த பலர் சாலை ஓரத்தில் நின்று கொண்டு அனுமனின் கொடியை வைத்துக் கொண்டு ஜெய் சிறீராம் முழக்கமிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆதர வாகவும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த ராகுல்காந்தி தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று அங்கிருந்த பலரிடம் கை குலுக்கினார். பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி அவர்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, அன்பில் பெரும் பலம் உள்ளது. பாரத் ஜோடோ நீதியாத்திரைக்கு எதிராக பாஜ தொண்டர்கள் முழக்கமிடுகின்றனர். ஆனால் பொதுமக்களின் தலைவர் ராகுல் ஜீ அவர்களை சந்தித்தார். காட்சி இப்படி மாறிப்போனது என்று பதிவிடப்பட்டுள்ளது.
ஏழைகள் புறக்கணிப்பு தொழிலதிபர்கள் ஊக்குவிப்பு – இதுதான் பிஜேபி அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Leave a Comment