இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர்ந்தால் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும்
ராகுல் காந்தி உறுதி
ராம்கர், பிப்.6- ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட் சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப் படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்தார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற் கொண்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய அவரது நடைப் பயணம் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது.
அங்கு அவர் நேற்று (5.2.2024) கூறியதாவது: ஜார்க்கண்ட் முதலமைச்சர் பழங்குடியினராக இருப்பதால் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி அரசை கவிழ்க்க பாஜ முயற்சி செய்தது. பாஜ-ஆர்எஸ்எஸ் சதியை தடுத்து ஏழைகளின் அரசைப் பாதுகாத்ததற்காக அனைத்து கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களையும், முதலமைச்சர் சம்பாய் சோரனையும் வாழ்த்துகிறேன். தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) கொத் தடிமைத் தொழிலாளர்களாக்கப்பட்டுள்ளனர். பெரிய நிறு வனங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நீதிமன்றங்களில் அவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்தி யாவின் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி இது. எனவே நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதே எங்களின் முதல் பணியாகும். தற்போதுள்ள விதிகளின்கீழ் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்க முடியாது.
எனவே இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும். இதன் மூலம் தாழ்த்தப் பட்டோர் மற்றும் ஆதிவாசிகளின் இடஒதுக்கீட்டில் எந்தக் குறைவும் இருக்காது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அவர் களின் உரிமைகளைப் பெறுவார்கள் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். இதுதான் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. இது சமூக மற்றும் பொருளாதார அநீதி. பிரதமர் மோடி தான் ஓபிசி என்று கூறுவார். ஆனால் ஓபிசி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு உரிமை கள் வழங்க வேண்டிய நேரம் வந்தபோது, ஜாதிகள் இல்லை என்று மோடி கூறுகிறார். ஆனால், தேர்தலில் வாக்குகளைப் பெறும் நேரம் வரும் போது, நான் ஒரு ஓபிசி என்று கூறுகிறார்.
மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை மெது வாகக் கொன்று வருகிறது. ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்இசி லிமிடெட்) செயல் படாமல் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு விரும்புகிறது. வரும் நாள் களில் எச்இசி என்ற பெயருக்கு பதில் அதானி என்று பெயர்ப் பலகை வைப்பார்கள். பெல், எச்ஏஎல், எச்இசி உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மெதுவாக அதானி யிடம் ஒப்படைக் கப்படுகின்றன. இதுபோன்ற தனியார் மயத்தை காங்கிரஸ் அனுமதிக்காது.
-இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.