லக்னோ,ஜன.27- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று (26.1.2023) தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய, மாநில அரசுகள் இந்தியாவை ‘உலகின் குரு’ ஆக உயர்த்த தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடியரசு தின நாளிலும் ஒன்றிய, மாநில அரசுகள், தங்களைத்தாங்களே மதிப்பீடு செய்து கொண்டு, வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பது குறித்து ஒரு வளர்ச்சி அறிக்கை வெளியிட வேண்டும். இந்த செயல், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன், குடியரசு தினம் வெறும் சம்பிரதாய விழாவாக இல்லாமல் நடப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்றிய வாக்குறுதிகளை குடியரசு நாளன்று வெளியிட வேண்டும் : மாயாவதி
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
