கும்முடிப்பூண்டி, நவ.27 கடந்த 22.11.2026 அன்று கும்முடிப்பூண்டி மாவட்டக் கழக கலந்துரையாடல் புழல் தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய மாவட்ட கழகத் தலைவர் புழல் த. ஆனந்தன், தன் தலைமை உரையின் போது, ‘‘தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம் தோறும் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விளம்பர தட்டியும், அதே போல பெருமளவில் ‘விடுதலை’ சந்தா திரட்டி அதை ஆசிரியர் பிறந்தநாளான டிசம்பர் 2 சுயமரியாதை நாளில் ஆசிரியரிடம் வழங்வேண்டும்’’ என்றார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற தோழர்கள் தங்களுடைய கருத்துகளை வழங்கிய பிறகு, மாவட்டக் கழகச் செயலாளர் கும்முடிப்பூண்டி ஜெ.பாஸ்கர் நன்றி கூறினார்.
பொன்னேரி வெ.அருள், புழல் சோமு, ஓவியர் ஜனாதிபதி, வடிவுக்கரசி ஜனாதிபதி, ந.கஜேந்திரன், சோழவரம் ப.சக்ரவர்த்தி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
