கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ அன்புமணி சுப்பராயன் நினைவேந்தல்- படத்திறப்பு!  முனைவர் துரை. சந்திரசேகரன் படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை!

4 Min Read
- Advertisement -

சங்கராபுரம், நவ.27 கடந்த 22.11.2026 அன்று சங்கராபுரம் நகரில்,கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் முனைவர் ம.சுப்பராயனின் இணையர் அன்புமணி சுப்பராயனின் நினைவேந்தல் -படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காப்பாளர் ம. சுப்பராயன் வரவேற்புரை ஆற்றினார். கல்லக்குறிச்சி மாவட்டக்  கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். முனைவர் த.ஜெயக்குமார்  இணைப்புரை வழங்கினார்.

புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஆ. லட்சுமிபதி,  மாநில கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், க.கோலக்காரன் மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு, மாவட்ட  கழக இலக்கிய அணித் தலைவர் புலவர்  செயராமன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் (ஓய்வு) முனைவர் உ. பிரபாகரன், சங்கராபுரம் பேரூராட்சித் தலைவர் ரோஜா ரமணி, துரை தாகப் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

தந்தை பெரியாருக்குப்
பிடித்த பெயர்கள்

முனைவர் துரை.சந்திரசேகரன், அன்புமணி சுப்பராயனின் படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை யாற்றினார். அவர் தனது நினை வேந்தல் உரையில், அன்புமணி என்ற பெயர் தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான பெயர். பெரியார் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போது அன்புமணி, அறிவுமணி, அருமை கண்ணு, காமராசு, முத்தையா, பன்னீர்செல்வம் என்றுதான் பெயர் வைப்பார். அந்த வகையில் அன்புமணி சிறப்பானவர். அம்மையார் தன்னுடைய ஆசிரியப் பணியில் ஏராளமான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, இன்று அவரிடம் படித்த மாணவி, சங்கராபுரம் பேரூராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். அவர் இங்கே உரையாற்றுபோது, “நான் அன்புமணி ஆசிரியரின் மாணவி” என்று பெருமையாகக் கூறினார்.

கழக மாவட்டக் காப்பாளர் சுப்ப ராயன் சீரிய பகுத்தறிவாளர். “சுயமரி யாதை வாழ்வே சுக வாழ்வு” என்ற நெறியில் வாழ்பவர். அதனால் புரட்சிகரமாக, வைதீக முறைப்படி சடங்குகள் எதுவும் செய்யாமல், அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சி மூலம், நம்மையெல்லாம் அழைத்து, கலந்து கொள்ளச் செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சி மூலம், அம்மையார் வாழ்ந்த வாழ்க்கை, செய்த அரிய செயல்கள்; அவரின் பண்பு நலன்கள் அனைத்தும் இரண்டு மணி நேரத்தில் அறியக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் சுப்பராயன்.

அன்புமணி சுப்பராயன், ‘‘அள வான குடும்பம் வளமான வாழ்க்கை’’ என்ற ‘‘தந்தை பெரியாரின்’’ நெறியைக் கடைப்பிடித்து, அளவோடு பிள்ளை களைப் பெற்றுக் கொண்டு வளமாக வாழ்ந்துள்ளார்.

அம்மையார், கழகத் தோழர்கள், சக ஆசிரியர்கள், சங்கத் தோழர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகிய அனை வரிடத்திலும் மனித நேயத்துடன் பழகி, சீரான வாழ்க்கையை தனது இணையருடன் வாழ்ந்துள்ளார்.

அம்மையார்,திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணி போன்ற பல நிகழ்வுகளில் இணையர் சுப்பராயனுடன் கலந்து கொண்டுள்ளார்.

அம்மையார், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய அய்ந்து நாடுகளில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு சுயமரியாதை மாநாடுகள் அனைத்திலும் சுப்பராயன் பங்கேற்க பொருளாதார உதவி செய்து மகிழ்ச்சியுடன் அனுப்பி உள்ளார்.

அம்மையார், கழக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் உள்பட கழக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தாராளமாக நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்.

அம்மையார் கொடுத்த ஊக்கமும் ஆக்கமும் தான் சுப்பராயன், முனை வர் பட்டம் பெற உதவியாக இருந்தி ருக்கிறது.

அம்மையார், பெயருக்கேற்ப அன்பாக இருந்து கணவரை வழி நடத்தி மனிதநேய பண்புடன் விளங்கி ,சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தி ருக்கிறார். அவரின் இழப்பு சுப்பராயன் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். இருப்பினும், சுப்பராயன் இந்த இழப்பிலிருந்து மீண்டு, உடல் ஆரோக்கியம் காத்து கழகப் பணியாற்ற வேண்டும் என்று கூறி நினைவேந்தல் உரையை முடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ,  மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்டத் தலைவர் எழிலரசன், மாவட்ட ஆசிரியர் அணித் தலைவர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் மா.ஏழுமலை, சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் மதியழகன் திருக்கோவிலூர் ஒன்றியத் தலைவர் இளங்கோவன், உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் செல்வ சக்திவேல், ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவர் சண்முகம் சங்கராபுரம் நகரத் தலைவர் கரிகாலன் செயலாளர் அன்பரசு மணலூர் பேட்டை நகர தலைவர் அய்யனார், மூங்கில் துறைப்பட்டு நகரத் தலைவர் சலீம்,கல்லை நகர தலைவர் முத்துசாமி செயலாளர் பெரியார் விழுப்புரம் மாவட்ட  கழகத் தலைவர் அரங்க.பரணிதரன், காப்பாளர் கோபண்ணா, விழுப்புரம் மாநகரத் தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் திருக்கோவிலூர் பாலன், கல்லக்குறிச்சி சுந்தரராசன்,

தமிழ் சங்கங்கள் சார்பில் செழி யன், முனைவர் சிறீ ராம்,சங்கை தமிழ்ச் சங்க செயலாளர் பாவலர் சாதிக் பாட்சா, கல்லை தமிழ்ச் சங்க பொருளாளர் சா.சண்முகம், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், திருவள்ளுவர் தமிழ் சங்கத் தலைவர் சவுந்தரராசன், முனைவர் நன்னிலம் சு.ஆறுமுகம், ஆண்டிமடம் தியாக முருகன், பாவலர் குளத்தூர் கோவிந்தன், கல்வித்துறை சார்பில், தெய்வநாயகம், வரதராஜன்,

அன்பழகன், கோவிந்தன், கமல நாதன், குடும்ப மருத்துவர்கள் ஆனந்தன், எஸ்.ஜெகதாம்பாள், செம்பியன் இராஜன், பழனியாப்பிள்ளை,  சங்க ராபுரம் ஓய்வூதியர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் கோ.செல்வராசன், பொருளாளர் ம.இராசேந்திரன், தமி ழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சு.அன்பழகன்,

உறவினர்கள் காசிவேல், முனி யம்மாள் இரா.மோகன் – ஆண்டாள், பரமேஸ்வரன் – கீதா, இளங்கீரன்- தன லட்சுமி, அருள், திருநாவுக்கரசு, பிரேம், துரை- ருக்குமணி, சங்கர்- திலகவதி, மோகன் ராஜ், பச்சையம்மாள், ரேகா, சாரதா உள்பட இருநூறு பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தந்தை பெரியாரின் ‘‘மனிதவாழ்வின் பெருமை எது?’’என்ற நூல் வழங்கப்பட்டது.

நிறைவாக அம்மையாரின் மகள் கவிதா நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *