மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை!

1 Min Read
- Advertisement -

கண்ணூர், நவ.27- கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பிரமுகர் சி.வி.தன்ராஜ். கண்ணூரின் எழிமலா பிரிவு செயலராக இருந்தார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி பையனூரிலிருந்து ராமன்தளிக்கு சென்று கொண்டிருந்த தன்ராஜை, ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து தாக்கி கொலை செய்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கண்ணூர் காவல் துறையினர் 20 பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இதில் 12-ஆம் நபராக குற்றம்சாட்டப்பட்ட சி.பிஜு என்பவர் கொலை செய்யப் பட்டார். இதையடுத்து 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டு கண்ணூரின் தளிபரம்பா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கே.என்.பிரசாந்த் நேற்று (25.11.2026) தீர்ப்பு வழங்கினார்.

குற்றம்சாட்டப்பட்ட பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் டி.பி.பிஜு (34), எம்.விபின் (34), எம்.வைசாக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 16 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *