ஆவடி, நவ. 26- ஆவடி மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 27.11.2026 அன்று மாலை 6:00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மதுரவாயல் பகுதி கழக மாணவர் கழகத் தோழர் ஆதிதமிழச்சி கடவுள் மறுப்புக் கூற மாவட்ட கழகச் செயலாளர் க.இளவரசன் வரவேற்புரையுடன் கலந்து ரையாடல் கூட்டத்தை ஒருங்கிணைக்க மாவட்ட கழகத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
முதலாவதாக 15.11.2026 அன்று மறைந்த பெரியார் பெருந்தொண்டர் “கொள்கை மாமணி” பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து இரண்டு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அடுத்ததாக மாவட்ட கழகத் தலைவர் வெ. கார்வேந்தன் அவர்கள் தனது உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 15 இடங்களில் சுவர் எழுத்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றும் டிசம்பர் 02ஆம் தேதி ஆசிரியர் அவர் களின் பிறந்தநாளை முன்னிட்டு காலை ஏழு முப்பது மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் கழகக் கொடியை ஏற்றி வைத்து ஊர்வலமாகச் சென்று ஆவடி ரயில் பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கழக வெளியீடு களையும் வழங்கி மகிழ வேண்டும் என்றார்.
மேலும் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்நாளை நீட்டிக்கும் ஒரு துளி முயற்சியாக ஆவடி மாவட்ட கழகம் சார்பில் 94 விடுதலை சந்தாக்களை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஆசிரியர் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பகுதிக் கழகங்களின் சார்பில் பொதுக்கூட்டம் அல்லது தெருமுனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடுத்ததாக 2027 ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆவடி மாவட்ட கழக சார்பில் குடும்ப விழா நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேற்கண்ட மாவட்ட கழகத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று அப்படியே தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட கழக துணைத் தலைவர் மு.ரகுபதி, மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் சு. வெங்கடேசன்,மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி, திருமுல்லை வாயல் பகுதி கழக தலைவர் இரணியன், ஆவடி நகர கழகச் செயலாளர் இ. தமிழ்மணி, திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப் பாளர் மா சிலம்பரசன், மதுரவாயல் பகுதி கழகத் தோழர் பிரகாஷ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன், ஆவடி புருஷோத்தமன், எழிலன், மாணவர் கழகத் தோழர் பா.வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ. நடராசன், முகப்பேர் முரளி, பட்டரவாகம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட கழக துணை செயலாளர் க. தமிழ்ச்செல்வன் நன்றி கூற கூட்டம் முடிவு பெற் றது.
