இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் ரத்து மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு கலைந்து சென்றனர்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மன்னார்குடி, ஜூலை 31- மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு கலைந்து சென்றனர்.

30.07.2026 அன்று காலை 9.30 மணி அளவில் மன்னார்குடி தந்தை பெரியார் சிலை அருகில் இருந்து  நீட் தேர்வையும் உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் புறப்படுவதற்கான தயார் நிலையில் இருந்த. கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை. ஆகிய அணிகள் பிரச்சார பயணத்திற்கு தயார் நிலையில் காலை 6.10 மணிக்கு மன்னார்குடி காவல் ஆய்வாளர் செயல்முறை ஆணை வழங்கி பரப்புரைப் பயணம் போகக்கூடாது கூறினார்.

தலைமைக் கழகத்திற்கு தகவலை தெரிவித்திருந்து அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருந்த நிலையில் தற்காலிகமாக பயணத்தை நிறுத்துங்கள் ஒவ்வொருவரும் அமைதி காக்க வேண்டும் என்று தலைமைக் கழகம் கொடுத்த அறிவிப்பிற்கிணங்க உடனடியாக கூட்டம் கலைவதற்கு முன் பயணம் தொடங்கும் இடமான தந்தை பெரியார் சிலைக்கு மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, நிகழ்வினை ஒருங்கிணைப்பு முழக்கமிட்டார். உடன் குடந்தை மாவட்ட காப்பாளர் வை. இளங்கோவன், ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் த.செல்வராஜ், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் புட்மநாதன், மாவட்ட ப.க தலைவர் வை.கவுதமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வாஞ்சியூர் இளங்கோவன், மாவட்ட ப.க அமைப்பாளர் கோபால், நகர ப.க தலைவர் கோவி.அழகிரி, ப.க அமைப்பாளர் அறிவானந்தம், நகர இளைஞரணி தலைவர் மணிகண்டன், ப.க துணை தலைவர் முரளிதரன், நகர இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித், தி.க சிவா வணங்காமுடி, மன்னை நகர செயலாளர் வே.அழகேசன், மன்னை நகர தலைவர் உத்திராபதி, மண்ணை ஒன்றிய துணைத் தலைவர் செல்வம், பேராசிரியர் காமராஜ், திருத்துறைப்பூண்டி நகர துணை செயலாளர் ப.சம்பத்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் பெ.தொண்டரம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, திருவாரூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் வே.அறிவழகன், திருவாரூர் மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ. அறிவுச்சுடர். சி.செ.கண்மணி, திருவாரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் எஸ். எஸ்.இரவிக்குமார், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணித் தலைவர் காரல் மார்க்ஸ், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ. பிரகாஷ், தஞ்சை இளைஞர் அணி கோ.ராகுல். நாகப்பட்டினம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தங்க.கிருட்டினன், நாகை நகரச் செயலாளர் சண். ரவிக்குமார், நாகை மாணவர் கழகம் சா.அறிவாளன் மயிலாடுதுறை ப.விஷ்வத் சந்தோஷ் ஆகியோர் பரப்புரை பயணத்திற்கு தயார் நிலையில் இருந்தனர்.

பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கும்பகோணம், காரைக்கால், நாகப்பட்டினம், ஜெகதாபட்டினம், நீடாமங்கலம், திருவாரூர், போன்ற பகுதிகளில் இருந்து இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் பயணத்திற்காக புறப்பட்டு வந்து, பின்னர் அனுமதி மறுப்பு செய்தி அறிந்தவுடன் ஆங்காங்கு இருந்து இல்லத்திற்கு திரும்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *