அரூர் ஒன்றியக் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளை முன்னிட்டு அய்ந்து இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்த முடிவு

2 Min Read
- Advertisement -

அரூர், நவ. 26- அரூர் கழக மாவட்டம், அரூர் ஒன்றியக் கலந்துரையாடல் கூட்டம் 15.11.2026 அன்று காலை 11 மணியளவில் தீர்த்தமலை சக்தி முருகன் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஒன்றிய கழகச் செயலாளர்  இல. புஷ்ப லிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் ரே.வடிவேலன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பெ.கல்பனா, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் பாளையம் பசுபதி, கடத்தூர்  ஒன்றியச் செயலாளர் பச்சையப்பன், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் வித்யாகர் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் சஞ் சீவன் அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்துத் தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் கீரை. பிரபாகரன் புதியதாக வருகை தந்த மாணவர்களின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் கருத்துரையாற்றினார்.

இறுதியாக மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்  மாரி. கருணாநிதி உரையில், ஒன்றிய திராவிடர் கழகத் தின் பணிகளும், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவை கொண் டாடுவது, தெருமுனைக் கூட்டங்களை நடத்து வது தொடர்பாக  சிறப்புரை யாற்றினர்.

மாவட்ட இளைஞர ணிச் செயலாளர் சஞ் சீவன்  பாளையம் கிராமத் திலிருந்து அபினேஷ், ஏழுமலை, என்கின்ற சிவபெருமாள், அகிலேஷ், தமிழன் புதியதாக 4 இளைஞர்களை  அழைத்து வந்து அறிமுகப்படுத்தினர். அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் தந்தை பெரியார் நூல்களை அளித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  94 ஆம் ஆண்டு பிறந்த நாளை  சுயமரியாதை நாளாக  ஒன்றியத்தில்  உள்ள கிரா மங்களில்  இனிப்பு வழங்கி  கொண்டாடுவது     எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளை முன்னிட்டு   பாளையம், வீரப்ப நாயக்கன்பட்டி, மாம்பாடி, வேப்பநத்தம், கட்டரசம்பட்டி  ஆகிய கிராமங்களில் தெரு முனைக் கூட்டங்களும், தீர்த்தமலையில் பொதுக் கூட்டமாகவும்  நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞரணி மாணவர் கழகம் சார்பில்  திராவிடர் கழகத்தின் நோக்கத்தை பற்றி  துண்டறிக்கை அளித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய கழகத்தின் சார் பில் சென்னையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் விடுதலை சந்தாவை சேர்த்து ஆசிரியரிடம் அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டத்தில் கல்லூரி மாணவி பெ. அக்சையா, மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ராமச்சந்திரன் கலந்துரையாடல் கூட்டத் தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு, தேநீர் வழங்கி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *