டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால் இந்தியா மீது 25% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்! அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அலுவலகம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் – கோயில் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு! தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத விவகாரத்தில், கோயில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழையாமையே காரணம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட்-யு.ஜி. வினாத்தாள் கசிவு வழக்கு – வல்லுநர் பி.வி. குல்கர்னியின் பிணை மனு குறித்து சி.பி.அய். பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.வி. குல்கர்னியின் பிணை மனு மீது டில்லி சிறப்பு நீதிமன்றம் சி.பி.அய்.யின் பதிலைக் கோரியுள்ளது.
* கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ. விவகாரம் – கைது, சி.பி.அய். விசாரணைக் கோரி டி.ஜி.பி.யிடம் உதயநிதி புகார்! சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாகக் கூறி தலைமைச் செயலாளர் சாய் குமாரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தல்.
தி இந்து:
* கருத்து வேறுபாடு என்ற பெயரில் கட்சி மாறுவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க வழிவகுக்கும் – உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே கருத்து! கட்சியின் அசல் அடையாளத்தைப் புறக்கணித்து, சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும் பான்மையை மட்டும் வைத்து கட்சி உரிமையைத் தீர்மானிக்க முடியாது என உத்தவ் தாக்கரே தரப்பு வாதம்.
– குடந்தை கருணா
