மகா பெரியவா பற்றி அறிய வா! (4)

7 Min Read
- Advertisement -

நேற்றைய (25.11.2026) தொடர்ச்சி வருமாறு

வர்ண தர்மம்

உண்மையில் எவ்வளவு வேற்றுமை இருந்தாலும் அன்பு இருந்தால் சாந்தம் இருக்கும். எவ்வளவு கூடி இருந்தாலும் அன்பு இல்லாவிட்டால் கலஹம்தான் உண்டாகும். எல்லா ஜாதிகளிடத்திலும் ஒரேவிதமான அன்பு இருக்க வேண்டும். நம்முடைய தாயினிடமும் குழந்தையினிடமும் எந்தவித அன்பு நமக்கு இருக்கிறதோ, அத்தகைய அன்பு பறையர்களிடத்தும் இருக்க வேண்டும். என்ன விதமான கஷ்டங்கள் இருந்தாலும் அன்பை விடக்கூடாது. அந்த அன்பு தர்மமார்க்கத்துக்கு விரோதமில்லாமல் இருக்க வேண்டும். தரித்திரத்தை நிவர்த்தி செய்வதிலோ, துன்பத்தை நீக்குவதிலோ, மற்ற ஜாதியார்களிடத்து அன்பு வைத்து நம் சக்திக்கும் மீறிச் செய்தாவது அவ்வன்பை வளர்க்கவேண்டும். நம்முடைய புத்திக்குத் தோன்றுவதெல்லாம் ஸரி யென்று சொல்ல முடியாது. ஒரு ஸமயத்தில் தோன்றுவது மற்றொரு ஸமயத்தில் தோன்றாது. ஆகையால் சாந்தமாகவும் உறுதியாகவும் இருந்து தர்மத்தைக் காப்பாற்றவேண்டும். இன்றைக்கு ஒன்று சொல்பவர்களே மறுபடி வேறொரு காலத்தில் மாறி வேறு சொல்லுவார்கள். கலப்புச் சாப்பாடு, கலப்புக் கல்யாணம் இவை அவசியமில்லை யென்று ஒப்புக்கொண்டவனே,தொடுவதும் அநாவசியம் என்று சொல்லுங்காலம் வந்தாலும் வரும்.

நந்தனார் கோயிலுக்குள் வர மாட்டேன் என்றார். ப்ராஹ்மணர்கள் வரத்தான் வேண்டுமென்றார்கள். ஸ்வாமி நந்தியை விலகச்செய்து காட்சி கொடுத்தார். இம்மூன்றிலும் உள்ளடங்கியிருக்கும் தத்வம்தான் வர்ணாச்ரமதர்மம். நந்தனார் தான் அந்தத் தர்மத்தைக் காப்பாற்றினவர் என்று சொல்லலாம்.

எந்த ஜாதியினிடத்தும் உண்மையான அன்பு ஏற்பட்டால் சாந்தம் உண்டாகும். ஒரு கிராமத்திற்கும், மற்றொரு கிராமத்திற்கும் வாய்க்கால் விஷயமாகச் சண்டை ஏற்படுகிறது. இந்தக் கிராமத்திலுள்ள பறையன் முதல் ப்ராஹ்மணர்கள் வரையில் எல்லோரும் ஒன்றாக இருப்பார்கள். அதேபோல அந்தக் கிராமத்திலும் ஒன்றாக இருப்பார்கள். இந்த ஊர்ப் பறையனும் ஜாதி ஒன்றுதானே என்று நினைத்துச் சேர்ந்துகொள்ள மாட்டார்கள். ஒரு கிராமம் என்ற ஐக்கியமே
இருக்கும். இந்த ஊர்ப் பறையன் அந்த ஊர்ப் ப்ராஹ் மணனோடு சண்டை போடுவான். எல்லோருக்கும் பொதுவான காரியம் ஆதலால் இங்கே ஜாதி வேற்றுமை இல்லை ஒவ்வொருவனும் கிராமத்திற்காகக் சண்டை செய்வான். அதுபோல மன ஒற்றுமை ஏற்பட வேண்டும்.

ப்ராஹ்மணன் செய்யும் வைச்வதேவத்தில் சண்டாள பலி கொடுக்கவேண்டும் என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. அவனுக்காக இவன் செய்வதனால் இருவரிடமும் அன்பு உண்டு என்று தெரிகிறது. பழைய காலத்து கிராமங்களில் அன்பும் ஒற்றுமையும் இருந்து வந்தது. கால தேச வர்த்தமானங்களின் மாறுதலால் கிராம ஸமுதாயம் மாறிவிட்டது. பணக்காரர்கள் பட்டணங்களுக்கு வந்துவிட்டார்கள்.அங்கே ஒவ் வொருவரும் தனித்தனியே பற்றின்றி இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.! கிராமத்தின் கட்டு விட்டுப் போய்விட்டது. இந்த ஸமயத்தில் அந்நிய மதஸ்தர்கள் புகுந்து உபதேசம் செய்தார்கள். அதனால் ஜாதிக் கட்டுப்பாடு போயிற்று. அவர்கள் தரித்திரம் அதிகமாக இருந்த காலத்தில் தங்கள் மதப் பிரசாரம் செய்தார்கள். கிராமத்திலிருந்த ஏழை ஜனங்கள் மயங்கிவிட்டார்கள். அவர்களுடைய மதத்திற் சேர்ந்தார்கள், நம்முடைய மதத்திற் சேர்பவர்களுக்கும் மற்ற மதத்திற் சேர்பவர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாஸம் இருக்கின்றது. ஏழைகளும் கூலிக்காரர்களும் இந்த மதத்திலிருந்து வேறு மதங்களுக்குப் போகின்றார்கள். மற்ற மதத்தினர்களிலோ அதிகமாகத் தத்வ விசாரணை செய்தவர்கள் தாம் நம்முடைய மதத்திற்கு வருகிறார்கள்.

அந்நிய மதஸ்தர்கள் புகுந்த பொழுதே நாம் நமது மதத்தினர்களைக் காப்பாற்ற முயன்றிருக்க வேண்டும். அப்பொழுது செய்யாததனால் இப்பொழுது ஒற்றுமையிற் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

மேம்நாட்டு அந்நிய மதஸ்தர்களை நாம் ஏன் பின்பற்றவேண்டும். நடை யுடை பாவனைகளில் அவர்கள் தாம் நம்மைப்போல் இருக்கட்டுமே என்று தைரியமாக நம் நிலையிலேயே இருக்க வேண்டும். நம் மதத்தில் எல்லாருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்ட தர்மங்களை நன்றாகச் செய்யவேண்டும். வாஸ்தவமான அன்பு இருந்தால் கஷ்டங்கள் தாமே நிவர்த்தியாகும். தனித் தனியாக உள்ள தர்மங்களெல்லாம் ஒரு பொது மதத்துக்கு ஆதாரமாக இருக்கின்றன. எந்த ராஜாங்கம் வந்தாலும் எது எப்படியானாலும் நாம் தர்மத்தை அநுஷ்டித்து வரவேண்டும். ஜீவநத்தை உத்தேசித்துத் தர்மங்கள் கெட்டுப் போயின. அப்படி விட்டிருக்கக் கூடாது. ஆபத்துக் காலங்களிலும் தர்மத்தில் ஒரு கண் இருக்க வேண்டும்: அநுஷ்டாநங்களை விடக்கூடாது. ஒருவன் தன் வர்ணத்துக்குரிய அநுஷ்டாநம் செய்வது பொதுவில் தேசத்துக்கே க்ஷேமத்தைத் தரும்.

ப்ராஹ்மணப் ஸ்நானம், ஸந்தியாவந்தநம், பூஜை முதலியவற்றைப் பறையனுடைய க்ஷேமத்தின் பொருட்டும் செய்யவேண்டும். நம்முடைய மதரக்ஷணத்திற்குச் சாஸ்திரந்தான் வழிகாட்டுகிறது. தாபத்திற்கு அன்புதான் சமநம். உண்மையாக நம்மிடம் அன்பு இருந்தால் நாம் ஐயத்தை அடைவோம்.
பரஸ்பர ஸஹாயத்தை அன்புகொண்டு செய்யவேண்டும். எந்தக் காலத்திலும் அன்பு குறையக்கூடாது. கவலையை விரட்டிவிட வேண்டும். என்ன விபரீதம் ஏற்பட்டாலும் அன்பைக் கைவிடக் கூடாது. நம்முடைய நல்ல பிரயத்தினங்களைச் செய்துகொண்டே இருக்கவேண்டும். பரோபகாரம் செய்யவேண்டும்.

லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்துகொண்டு பயமின்றி அன் புடன் ஸாமான்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷ தர்மத்தைக் கூடியவரைக்கும் ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அருள்வாராக.

சிவமயம்

நமச்சிவாயத் திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

பண் – காந்தார பஞ்சமம்

சொல் துணை வேதியன் சோதி வானவன்

பொன்துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ

கல்துணைப் பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும்

நல்துணை யாவது நமச்சி வாயவே.

1

ஆன்மாக்களுக்கு உற்ற துணை யென்று சொல்லப்பெறும் அந்தணனும், ஒளியை யுடைய தேவனாகிய இறைவனது பொலிவினையுடைய திருந்தமாகிய இணையடிகளை பொருந்தும்படி கைதொழுதலால், கல்லோடு சேர்த்துக்கட்டி ஒப்பு அரிய கடலிற் புகச் செலுத்தினாலும், அவ்வாறு பாய்ச்சப்பெற்றவர்க்கு உற்ற தணையாவது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்துமேயாம் என்றவாறு. (1)

பூவினுக்கு அருங்கலம் பொங்குதாமரை

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்

கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது

காவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே.  2

பூக்களுக்கு அருங்கலமாவது விளங்குகின்ற தாமரை மலரேயாம்; பசுக்களுக்கு அருங்கலமாவது சிவபெருமான் அஞ்சாகிய கௌவியங்களில் அபிஷேகம் கொண்டருளுதலேயாம்; அரசனுக்கு அருங்கலமாவது கோணுதலில்லாதேயாம்: நாவுக்கு அருங்கலமாவது சிவநாமமந்திர மாகிய திருவைந்தெழுத்தேயாம் என்றவாறு. (2)

விண் உற அடுக்கிய விறகில் வெவ்வெழல்

உஸ்ணிய புதில் அவை ஒன்றும் இல்லையாம்

பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை

கண்ணி நின்று அறுப்பது நமச்சி வாயவே. 3

வானத்தைப் பொருந்த அடுக்கப்பட்ட விறகுப்போரில் கொடிய நெருப்பானது உண்ணுமாறு புகுந்தால், அடுக்கிய அவ்விறகுகள் ஒரு சிறிதும் இல்லையாய்க் கெட்டொழியும்.(அது போல) படைத்த இந்நிலவுலகத்தினில் பிறவிதோறும் செய்த மிகுந்த பாவத்தைப் பொருந்தி நின்று இற்றொழியச் செய்வது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தேயாம் என்றவாறு. (3)

இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாறையும்

விடுக்கண் பிரான் என்று வினவுவோம் அல்லோம்

அடுக்கல் கீழ்கிடக்கினும் அருளி.எ நாம் உற்ற

ஈடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.         4

துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் இத்துன்பத்தின்றும் எம்மை விடுவித்தலால் நீரே எமக்குப் பிரானாவிர் என்று சிவபிரானல்லாத யாவையும் யாரையும் இரந்து கேட்போம் அல்லோம் மலையின்கீழ் அகப்பட்டுக் குடத்தலாகிய பெருந் துன்பம் வரப் பெறினும் யாம் பொருந்திய நடுக்கத்தினை கருணையினால் கெட்டொழியச் செய்வது நமச்சிவாய என்னும் சிவ மூலமந்திரமேயாம் என்றவாறு. (4)

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்

அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்

திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி

நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே. 5

தவசிகட்கு எல்லாம் பெறுதற்கரிய அணிகலமாவது தீயின்கண் நீற்றப்பட்ட திருநீரேயாம்: அந்தணர்களுக்கு அரிய அணிகலமாவது அரிய வேதங்களும், அவற்றைச் சார்ந்த ஆறங்கங்களுமே. சந்திரனுக்கு அரிய அணிகலமாவது விளங்கும் இறைவனுக்கு நீண்ட திருமுடியேயாம். எங்களுக்கு அரிய அணிகலமாவது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்துமேயாம் என்றவாறு. (5)

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால்

நலம்இலன் நாடொறும் நல்குவான் நலன்

குலம்இலர் ஆகினும் குலத்துக்கு ஏற்பதோர்

நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

6

(இறைவன்) யாரிடத்திலும் கோபமில்லாதவன் சங்கரன் அடைந்தவர்க்கன்றி நன்மை செய்தலிலன்; தினந்தோறும் நன்மையைச் செய்வான். குலநலம் இல்லாதவன் என்றாலும் நற்குலத்திற்குப் பொருந்துவதாகிய நன்மையை நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து மிகுதியாகக் கொடுப்பதாம் என்றவாறு. (6)

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி கூடச் சென்றலும்

ஓடினேன் ஓடிச்சென்று உருவம் கண்டலும்

நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.

7

இந்நிலவுலகத்தில் அநேகர் இறந்தார்கள், மேலான அடியார்கள் அந்த முத்தி நெறியை அடைந்தார்கள். அந்நெறியைக் கூறுமாறு சொல்லலும் ஓடினேன். விரைந்து சென்று திருவுறுவைக் கண்டபோது அதனது உண்மை யிலக்கணத்தைக் கேட்டறிந்தேன். நாடிய யான் நாடினது நமச்சிவாய என்றும் திருவைந்தெழுத் துமேயாம் என்றவாறு. (7)

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

8

வீட்டினின் விளக்காவது இருட்டினை ஒழிப்பது. சொல்லப்பெற்ற உள்விளக்காவது சிவஞாநப் பிரகாசத்தையுடையது. பலவிடத்து விளக்கெனப்படுவது எல்லோரும் காணப் பெறுவது. நல்ல மன விளக்காய் அமைவது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்துமேயாம் என்றவாறு.

முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்

தன்னெறியே சரணாதல் திண்ணமே

அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கெலாம்

நந்நெறியாவது நமச்சி வாயவே.

9

எல்லா நெறிகளுக்கும் முற்பட்ட நெறியாகிய முழுமுதற்றலைவனாகிய மூன்று கண்ணையுடைய இறைவனது நெறியையே யாங்கள் புகலாகச் சென்று சேர்தல் உறுதியேயாம். அம்முன்நெறியைச் சென்று சேர்ந்து அதில் சிவஞாந சித்தியடைந்த சீவன் முத்தர்க்கெல்லாம் நல்வழியாயிருப்பது நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்தேயாம் என்றவாறு. (9)

மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச்சி வாயப் பத்து

ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே      10

திருச்சிற்றம்பலம்

பெருமை வாய்ந்த பெண்மான் போலும் உமாதேவியாரை ஓர் பாகத்து உடையவனது பூ மாலைகள் பொருந்திய திருந்திய திருவடியினை பொருத்தமாகக் கைகூப்பித் தொழும்பொருட்டு, நாவான் இயன்ற சொன்மாலையாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினைப் பாடிப் போற்ற வல்லவர்களுக்கு எந்தத் துன்பமும் உண்டாகாது. சிவம்.

நமச்சிவாயப்பத்து உரை முற்றும்

(இது சமணர்கள் கற்றூணிற் கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதி அருளப் பெற்றது.)

(முற்றும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *