சென்னை, நவ. 24- கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், “ஜூலையிலேயே ஆட்சியர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள்,” என்று நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தெரிவித்தார். அதோடு, வழக்கை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் கண்காணிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற தாகவும், தேவையற்ற மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் பெண் ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர் பாக அதிமுக பெண் வழக்கறிஞரான ஆர்.திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார்.
அப்போது, இந்தப் புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நீதிபதி வி.லட்சுமி நாராயணன், “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பான வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம்; இந்த வழக்கை வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் பிரவீன்குமார் அபினவு கண்காணிக்க வேண்டும்.
இது குறித்து ஜூலையிலேயே ஆட்சியர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். யாரையாவது காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறதா? தலைமைச் செயலாளர், தூய்மைப் பணியாளர் என யாராக இருந்தாலும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். பின்னர், இந்த வழக்கின் விசார ணையை நவ.27-க்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டில் உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் யோகேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் விசா ரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
