தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி மேனாள் அமைப்பாளரும், பணி நிறைவு பெற்ற ஆசிரியரும், தனது இறப்புக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உடற்கொடையாக வழங்கியவருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் எட்டாமாண்டு நினைவு நாளை (26.11.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் உணவிற்காக ரூ.3000 நன்கொடையை இணையர் மா.பால்ராசேந்திரம். மகன் வழக்குரைஞர் பா.இராசேந்திரன் வழங்கினர்.

திராவிட இயக்கப் பற்றாளரும், ஆசிரியருமான குரு.இராமச்சந்திரனின் பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2026) அவர்தம் மகன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்து திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினார்.
