பாலாகாட், நவ.23 மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் கிராம விழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (21.11.2026) நடைபெற்ற விழாவில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கிரணாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹிர்ரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகளும் முதலில் கிரணாபூரில் உள்ள சமூக நல மய்யத்தில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு அவர் களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 45 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக பாலாகாட் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர். அதே உணவைச் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 12 பெரியவர்களும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். சமூக நல மய் யத்தில் சிகிச்சை பெற்ற மற்ற குழந்தைகள் உடல்நலம் தேறி யதைத் தொடர்ந்து வீடு திரும்பினர்.
குழந்தைகள் பாதிக்கப்பட் டது குறித்து தகவல் அறிந்த பாலாகாட் மாவட்ட ஆட் சியர் ஆதித்யா சிங், நேற்று (22.11.2026) காலை மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அனை வருக்கும் உரிய சிகிச்சை அளிக் கப்படுவதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மாவட்ட மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் 45 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சத்ருகன் சிங் தாஹியா தெரிவித்துள்ளார். பாதிக்கப் பட்ட அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப் பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள் ளார்.
