புதுச்சேரியில் விடியலைத் தரும் ‘விடுதலை’ ஆசிரியர் பிறந்தநாள் விழா கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read
- Advertisement -

புதுச்சேரி, நவ. 23- திராவிடர் கழகப் புதுச்சேரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 20-11-2026 அன்று இரவு 7.00 மணியளவில் புதுச்சேரி, இராசாநகர் பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி மாவட்டச் செயலாளர் தி.இராசா கடவுள் மறுப்பு உறுதிமொழி கூறி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளையும், கழகத்தின் எதிர்கால வேலைத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினர்.

நிறைவாக திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தோழர்களின் கருத்துகள், ஆலோ சனைகள் அனைத்திற்கும் பதில் அளித்தார்.

மேலும், தலைமைச் செயற் குழுக் கூட்டத் தீர்மானங்கள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, ஏன் சிறப்பாக நாம் நடத்திட வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறி உரையாற்றினார்.

பின்னர் கீழ்கண்டத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவரும், ஆசிரியர் அய்யாவின் நம்பிக்கைக்கு உரியவராக உயிருள்ளவரை செயல்பட்டு அண்மையில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி பொத்தனூர் க.சண்முகம் (104-வயது) அவர்களுக்கு இந்தக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அவரின் தொண்டிற்கு வீர வணக்கத்தையும் செலுத்துகிறது. (அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்).

தமிழர் தலைவர் ஆசிரியரின் 94 ஆம் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாவட்டக் கழகம் சார்பில் 94 விடுதலை சந்தா வுடன் அவரை நேரில் சந்தித்து வழங்குவது என்றும், அதற்குரிய பணிகளைத் தோழர்கள் சிறப்பாகச் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.

புதுச்சேரி மாவட்டக் கழகம் சார்பில் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளை பெரியார் படிப்பகத்தில் ஒரு விழாவும் ஏம்பலம், சேதராப்பட்டு, முத்தியால்பேட்டை, பாகூர், வில்லியனூர், மூலைக்குளம், முதலியார் பேட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது எனவும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெரியார் பற்றாளர்கள் பங்கெடுக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை பெரியார் குடும்ப விழா என சிறப்பாக நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

புதுச்சேரியில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நூகர்வோர் விவரங்கள் துறை சார்பில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் அவசரத் கோலத்தில் முறையாக ஆய்வு செய்யப்படாமல் தற்போது மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டு வருவதையும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென புதுவை அரசைக் இக் குழு கேட்டுக் கொள்கிறது.

இறுதியில் கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் புதிய வரவாக கழகத்தில் இணைந்துள்ள தோழர்கள் கே.சசிகுமார், ந.பரமேஸ்வரன் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து ஆசிரி யர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை நூல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.இரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர் கி.அறிவழகன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், திராவிடர் கழகப் புதுச்சேரி நகராட்சிப் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், டி.குணசேகரன், தொழிலாளரணித் தலைவர் வீர. இளங்கோவன, கொம்யூன் கழகப் பொறுப்பாளர்கள் பொ.தாமோதரன், கலைப்புலி. கு.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *