வெற்றிப்படி திட்டத்தின் கீழ் மென்பொருள், நிதி சார்ந்த இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

- Advertisement -

சென்னை, நவ. 23- வெற்றிப்படி திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்களுக்கு மென்பொருள், நிதி சார்ந்த இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில், வெற்றிப்படி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் மூலமாகச் சென்னை மாவட்டத்தில் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில் இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

கல்வித் தகுதி மற்றும் நிபந்தனைகள்

மென்பொருள் சார்ந்த பயிற்சிகள்: இளங்கலைப் பொறியியல்  அல்லது பி.எஸ்.சி கணினி அறிவியல்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிதி சார்ந்த பயிற்சிகள்: இளங்கலை வணிகவியல் அல்லது இளங்கலை வணிக நிர்வாகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது மற்றும் வருமான வரம்பு: விண்ணப்பதாரர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும், 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஆண்கள்: எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி, மேற்கு சி.அய்.டி. நகர், சைதாப்பேட்டை, சென்னை.

பெண்கள்: அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆராய்ச்சி மாணவியர் விடுதி (கற்றல் கற்பித்தல் மய்யம்), சைதாப்பேட்டை, சென்னை-15.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகத் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.

இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஆதிதிராவிட நல இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnadw.tn.gov.in என்ற முகவரியில் வருகிற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *