பெங்களூரு, நவ.22 அரசுப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்திற்கு தேவையான அரிசியை அதிகாரிகள் வழங்கவில்லை. இதனால் 300 மாணவர்கள் பசியில் துடிக்கும் நிலை வந்த நிலையில் அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து, மாண வர்களின் மதிய உணவுக்கு அரிசி வாங்கிக் கொடுத்துள்ளது நெகிழ வைத்துள்ளது.
இந்த நிகழ்வு கருநாடகாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகாவில் சல்லால் கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மொத்தம் 300 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அரசு சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு மதிய உணவுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சல்லால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்திற்கு தேவையான அரிசியை அரசு அதிகாரிகள் வழங்கவில்லை.
இதனால் அந்த திட்டம் 15 நாள்க ளுக்குள் நிறுத்தப்படும் நிலை வந்தது. பள்ளியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. அரிசி இல்லாததால், மதிய உணவுத் திட்டத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என ஆசிரி யர்கள் கவலை தெரிவித்தனர். அதிகாரி களுக்குத் தகவல் அளித்தும் பள்ளிக்கான அரிசி கிடைக்கவில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டினர்.
இதுபற்றி அறிந்த கிராம மக்கள் மனம் நொந்து போயின. எப்படியாவது மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை பள்ளி நிறுத்தக்கூடாது, அதற்கான உதவியை வழங்க முடி வெடுத்தனர். அதன்படி கிராம மக்கள் இணைந்து நன்கொடை வசூல் செய்து நான்கு குவிண்டால் அரிசியை வாங்கி பள்ளிக்கு வழங்கினர். இதன்மூலம் மாண வர்களுக்குத் தொடர்ந்து மதிய உணவு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.
‘காமராஜர்’ என்றதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது காங்கிரஸ் கட்சி யும், அவரது மதிய உணவு திட்டமும் தான். தமிழ்நாடு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து வெற்றிக்கரமாக செயல்படுத்திய காமராஜர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கருநாடகாவில் தான் தற்போது இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .
கருநாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் உள்ளார். தற்போது அம்மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில்உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூ தியம் வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரு கின்றன. இப்படியான சூழலில் அரசுப் பள்ளியின் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான அரிசி வழங்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. சமூக ஆர்வலர்கள் அரசு மற்றும் அதிகாரிகளை விமர்சனம் செய்து வரு கின்றனர்.
