மதம் மாறியவர்களை பிசி, எம்பிசி பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய தொடரப்பட்ட வழக்கில் டிச.18 இல் இறுதி விசாரணை

2 Min Read
- Advertisement -

உயர்நீதிமன்றம்

மதுரை நவ. 22–  மதம் மாறிய​வர்​களை பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் பட்​டியலில் இருந்து நீக்​கக் கோரிய வழக்​கில் டிச.18 இல் இறுதி விசா​ரணை நடை​பெறும் என உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

இந்து மதத்​தில் இருந்து கிறிஸ்தவ மதத்​தக்கு மாறியவர்களை பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் பட்​டியலில் இருந்து நீக்​கக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மதுரை மாவட்​டம் மேலூர் தெற்கு தெரு​வைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்​பவர் மனுத் தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு விசா​ரித்து, “இந்த வழக்கு தமிழ்நாட்டின் இட ஒதுக்​கீடு தொடர்​பான சட்​டக் கோட்பாடுகளின் அடித்​தளத்தை கேள்​விக்​குள்​ளாக்கி இருப்​ப​துடன் அரசி​யலமைப்​புச் சட்ட விவாதங்​களை​யும் எழுப்​பியுள்​ளது.

எனவே, வழக்கு விசா​ரணைக்கு ஏற்​கப்​படு​கிறது. இந்த மனு தொடர்​பாக தமிழ்நாடு அரசு மற்​றும் டிஎன்​பிஎஸ்சி தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். மனுதா​ரர் இடைக்​கால நிவாரணம் வேண்​டும் என்​றால் அதற்கு தனியாக மனு தாக்​கல் செய்​ய​லாம்” என உத்​தர​விட்​டனர்.

அதன்​படி, இடைக்​கால நிவாரணம் கோரி கோடீஸ்வரன் மனு தாக்​கல் செய்​தார். அந்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழ்நாட்டில் 4 பிரிவு​களில் காலியாக உள்ள 6,574 குரூப் 4 பணி​யிடங்​களை நிரப்​புவது தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி அக்.6 இல் அறி​விப்பு வெளி​யிட்​டது. இப்​பணி​யிடங்​களுக்​கான தேர்வு அடுத்த ஆண்டு ஜன. 10 இல் நடை​பெறுகிறது.

இப்​பணி​யிடங்​களில் 26.5 சதவீத பணி​யிடங்​கள் பிசி வகுப்​பினருக்​கும், 20 சதவீத பணி​யிடங்​கள் எம்​பிசி மற்​றும் சீர்​மரபினர் பிரிவுக்​கும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு 200 இடங்​கள் கொண்ட தொகுப்​பில் 53 இடங்​கள் பிசிக்​கும், 40 இடங்​கள் எம்​பிசி மற்​றும் சீர்​மரபினருக்​கும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​பி​ரி​வினருக்​கான இடஒதுக்​கீடு உண்​மையில் இப்​பி​ரிவு​களைச் சேர்ந்​தவர்​களுக்கு வழங்​கப்படுதில்லை. இந்து மதத்​தில் இருந்து கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய பல ஜாதி​யினர் தொடர்ந்து பிசி, எம்​பிசி மற்​றும் சீர்மரபினர் பிரிவு​களில் தொடர்​கின்​றனர். இப்​பி​ரிவை சேர்ந்​தவர்​களின் அரசுப் பணிகளை மதம் மாறியவர்கள் பெறுகின்​றனர். இத​னால் இட ஒதுக்​கீட்​டின் உண்​மையான நோக்​கம் பாதிக்​கப்​படு​கிறது.

தற்​போதுள்ள அட்​ட​வணை​யின்​படி பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் பிரி​வினருக்​கான இட ஒதுக்​கீடு இடங்​கள் நிரப்​பப்​பட்​டால் என்​னைப் போன்​றவர்​களுக்கு பாதிப்பு ஏற்​படும். எனவே, குரூப் 4 பணி​யிடங்​களில் பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​பட்​டோரின் பட்​டியலை வெளி​யிட​வும், நேர்​காணல் நடத்தி பணி நியமன ஆணை வழங்​கவும் தடை விதிக்க வேண்​டும்.

இவ்​வாறு மனுவில் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்​வில் 19.11.2026 அன்று விசாரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில், “இந்த வழக்கை அவசர​மாக விசா​ரிக்க தற்​போது அவ​சி​யம் ஏற்​பட​வில்லை. குரூப் 4 தேர்வு ஜனவரி மாதம்​தான் நடை​பெறுகிறது. தனிப்​பட்ட முறையில் மனுதா​ரர் வழக்கு தொடர்ந்​துள்​ளார். இதை பொதுநல வழக்​காக கருதக்​கூடாது. எனவே, மனுவை அவசர​மாக விசா​ரித்து இடைக்​கால உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டியதில்லை.

அரசுத் தரப்​பில் விரிவான பதில் மனு தாக்​கல் செய்​யப்​படும். அதற்கு அவகாசம் வழங்க வேண்​டும்” என கூறப்​பட்​டது. இதையேற்று விசாரணையை டிச.18 ஆம் தேதிக்கு தள்​ளிவைத்த நீதிப​தி​கள், அன்​றைய நாள் இறுதி விசா​ரணை நடை​பெறும் என்று தெரி​வித்​தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *