நாடு முழுவதும் 32 போலி பல்கலைக்கழகங்கள்!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.22 பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி, அவ்வப் போது நாடு முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்படும் கல்வி நிலை யங்கள், பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வரும். அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பு ஒன்றை யுஜிசி வெளியிட்டு உள்ளது.

யுஜிசி சட்டப்படி, அங்கீக ரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்றவற்றிற்கு செல்லாது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 32 போலி பல்கலைக் கழகங்கள் செயல்படுவது அடையாளம் காணப்பட்டு உள்ளன.

முதலிடத்தில் தலைநகர் டில்லி உள்ளது. இங்கு மட்டும் மொத்தம் 12 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உத்த ரப்பிரதேசத்தில் 4 போலி பல் கலைக்கழகங்கள் உள்ளன.

ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்கள், யூனியன் பிரதே சங்களில் தலா 2 போலி பல்கலைக்கழ கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆந்திராவில் 3, புதுச்சேரியில் (உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி, சிறீபோதி உயர்கல்வி அகாடமி) 2 போலி பல்கலைக் கழ கங்கள் உள்ளன.

மேற்கு வங்கம், கருநாடகா, கேரளா (பன்னாட்டு இஸ்லாமிய நபித்துவ மருத்துவப் பல்கலை, ‘புனித’ ஜான் பல்கலைக்கழகம்), மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 கல்வி நிறுவனங்களும், அரியானா, ஜார்க்கண்டில் தலா ஒரு கல்வி நிறுவனமும் போலியாக இயங்கி வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *