யாரைத்தான் நம்புவதோ? சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிற்கு மருத்துவர் பாலியல் தொல்லை!

- Advertisement -

மதுரை, நவ.21- மதுரையில் சிகிச்சைக்கு சென்ற காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல் போராட்டம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாப் பட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது கணவர் சென்னையில் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் தன் குழந்தைக்கு சளி என்பதால் தனது குடும்ப மருத்துவரான விருதுநகரில் சிறு மருத்துவமனை வைத்திருந்தவரும், தற்போது மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவருமான மருத்துவரிடம் சிகிச்சை பெற அண்மையில் காலையில் பேருந்து மூலமாக வந்துள்ளனர். அப்போது மருத்துவர் வெளியூரில் இருப்பதாக மருத்துவமனையில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

அப்போது செல்பேசியில் மருத்துவரிடம் கேட்டபோது அவர், வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை காட்டி சிகிச்சையளித்து விட்டுப் போகலாம் என காத்திருந் துள்ளனர்.  மாலை மருத்துவர் துரைராஜ் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இளம்பெண் தனது மகனை மருத்துவரிடம் காட்டி சிகிச்சையளித்த பின்னர் மாத்திரை வாங்கி செல்ல மருந்து சீட் எழுதிக்கொடுத்துள்ளார்.

அப்போது இளம்பெண் தனக்கு தோள்பட்டையில் வீக்கம், வலி இருப்பதாக கூறியுள்ளார்.

அப்போது மருத்துவர் அறைக்குள் வருமாறு கூறிய நிலையில் இளம்பெண் தாய், தந்தை சென்றபோது மருத்துவர் தாய், தந்தையை வெளியில் போக கூறியுள்ளார்.  அப்போது இளம்பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்த போது  பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டு அழுதபடி தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவசர காவல்துறை அழைப்பு எண்ணுக்கு (100) போன் செய்துள்ளனர். அதன்பின் அருகில் இருந்த காவல்துறையினர் வந்துள்ளனர்.

பின்னர் மருத்துவர் துரைராஜ் மீது இளம்பெண் மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக (19.11.2026) புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று (20.11.2026) காவல் நிலையத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தியும்  கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காவலரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், மருத்துவருக்கு உடந்தையாக காவல்துறை ஆய்வாளர் விமலா இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் அழைத்துச் செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் “இந்த நிகழ்வு மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. ஒரு காவல்துறையைச் சேர்ந்த குடும்ப பெண்ணுக்கு இதுபோன்று ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால் பெண்கள் பாதுகாப்பு எப்படி உள்ளது என சந்தேகமாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்பதற்காக நாங்கள் வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி அமைச்சரின் தலையீடு இருக்கிறது” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *