யுவான் சுவாங் பார்வையில் திராவிட நாடும், நிலவு தேசமும்!

- Advertisement -

சரா

இந்திய தீபகற்பத்தில் மனித இனம் மெல்ல மெல்லக் குழுவாகக் கூடி சிறு குழு, பெரிய கூட்டம், குக்கிராமம், கிராமம், சிறுநகரம், நகரம், பெருநகரமாக நாகரிகத்தின் உச்சத்தை இன்றிலிருந்து 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்து நதி, வைகை, நர்மதை, கிருஷ்ணா, கோதாவரி என இந்திய தீபகற்பத்தில் மேற்பகுதியில் நாகரிகம் செழித்தது.

ஹிந்த் தேசம்

சிந்துச் சமவெளி நாகரிகம் முடிந்த பிறகு சுமார் 1,000 ஆண்டுகள் கழித்து இந்திய தீபகற்பம் 16 மகாஜனபதம் என்ற குழுக்களாக பிரிந்திருந்தது. அந்த மகாஜனபதத்தில் தென் இந்தியா இல்லை. அஸ்வகம் என்ற ஒரு மகாஜனபதம், இன்றைய மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேசப் பகுதிகளைக் குறித்து அதற்குக் கீழே இருந்த தென் இந்திய குறித்த பதிவுகள் கிடைக்கவில்லை. அப்போது முழுமையான அடையாளப் பெயர்கள் இல்லாமல் அங்கம், அஸ்மகம், அவந்தி, சேதி, காந்தாரம், காசி, கம்போஜம், கோசலம், குரு, மகதம், மல்லம், மத்சயம், பாஞ்சாலம், சூரசேனம், வஜ்ஜி, வத்சம் என இருந்தது.

இப்படி இருந்த பகுதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த பகுதிகளை இந்தியாவிற்கு வெளியே இருந்த வந்தவர்கள் அடையாளப் பெயராக ஹிந்த் என்று கூறினார்கள்.

சிந்து ஹிந்து இண்டிக்

உலகின் நைல், யூப்ரடீஸ் டைகரீஸ், மஞ்சள் ஆறு போன்ற நாகரிகத்தின் மூத்த நாகரிகமாக சிந்துச் சமவெளி திராவிட நாகரிகத்தை அடையாளப்படுத்திய முதன்மை அம்சம் சிந்து நதி.

இந்த நதியின் பெயரே பிற்காலத்தில் பல மொழிகளில் இந்தியாவின் பெயராக உருமாறியது. இதன் வரலாற்று மற்றும் மொழியியல் பயணம் மிகவும் சுவாரசியமானது.

பண்டைய மெசபடோபிய மற்றும் எகிப்திய குறிப்புகளில் உள்ள சிந்த் என்பது ‘நதி’ அல்லது குறிப்பாக இன்றைய சிந்து நதியைக் குறிக்கும்.

பண்டைய பாரசீகர்கள் ‘ச’ S ஒலியை ‘ஹ’ H என உச்சரித்ததால், சிந்து ஹிந்து Hindu / Hind ஆனது. இதன் மூலம் “ஹிந்துஸ்தான்” போன்ற பெயர்களும் தோன்றின.

கிரேக்கர்கள் வழியாக இது இண்டஸ் Indus ஆக மாறியது. அதிலிருந்து மேற்கத்திய மொழிகளில் “India” என்ற பெயர் நிலைத்தது.

இந்த ஒலி மாற்றம் வெறும் உச்சரிப்பு மாற்றம் மட்டுமல்ல; அது பல நூற்றாண்டுகளாக வர்த்தகம், படையெடுப்புகள் மற்றும் கலாச்சார தொடர்புகளின் விளைவு ஆகும்.

ஹிந்த் நிலவு

சீனர்களுக்கு இந்தியா முதலில் பவுத்தம் வழியாக அறிமுகமானது. அவர்கள் தொடக்கத்தில் இந்தியாவை:

ஷெண்டு / யுவாண்டு (Shēndú / Yuāndú), தியான்சு (Tiānzhú), சியான்டோ (Xiándòu) என்று அழைத்தனர். இவை அனைத்தும் “சிந்து / ஹிந்து” என்ற சொல்லின் சீன ஒலிபெயர்ப்புகளே. “தியான்சு” என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. அதாவது அறிவை தொடர்ச்சியாக தலைமுறைக்கு மாற்றுவது; மற்றோன்று மூங்கில்கள். ஒரு மூங்கில் வைத்தவுடன் அடுத்து அடுத்து வளரும் மூங்கில் வனத்தைக் குறிக்கும் பொருள் தரும்.

இந்தப் பெயர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தன. அதன் பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வந்த பாகியான் உள்ளிட்ட பவுத்த துறவிகளின் பதிவில் பழைய பெயர்கள் நீங்கி ஹிந்த் என்ற பெயரே பயன்பாட்டில் எழுதப்பட்டது.

கி.பி.629ஆம் ஆண்டு ஹர்ஷ்வர்த்தன் ஆட்சிக் காலத்தில் இந்திய தீபகற்பத்திற்குள் தரை மார்க்கமாக வருகை தந்தவர் யுவான் சுவாங்.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த இவர் சுமார் 2 ஆண்டுகள் நடைப் பயணத்தில் அவர் சந்தித்த நபர்கள் இந்தியாவை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை தெளிவாக எழுதி வைத்துள்ளார்.

தனது ‘Great Tang Records on the Western Regions’ (大唐西域記 – Da Tang Xiyu Ji) என்ற பயணக் குறிப்பில் இந்தப் பெயர்களை அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதியது:

“அவர் தெளிவாக ‘இந்து’ (印度 – Yìndù) என்று அழைத்தார்.

அவர் ஒட்டுமொத்த தீபற்பத்தை ஹிந்து என்று குறிப்பிடவில்லை  பகுதி வாரியாக உள்ள பெயரை குறிப்பிடுகிறார்.

பொதுவாக நாலந்தாவைச் சுற்றியே இந்தியத் தீபகற்ப வரலாறு அப்போது பேசப்பட்டதால் அவர் நாலந்தா உள்ள வட இந்தியப் பகுதியை பொதுப் பெயராக ‘இந்து’  என்று குறிப்பிட்டார்.

அவர் தெளிவாக ‘ஹிந்து’ என்று குறிப் பிட்டதற்கு முக்கியக் காரணம், சீன மொழியில் நிலவுக்குப் பல பெயர்கள் உள்ளன; இது அவற்றில் ஒன்று ‘ஹிந்து’ ஆகும்.

யுவான் சுவாங் இந்தப் பெயர் குறித்து தனது உரைக்குறிப்பில் விபரம் தருகிறார்.

உலக உயிரினங்கள் தொடர்ந்து. அறியாமை என்னும் நீண்ட இரவில் உள்ளது அவற்றின் விடிவுக்கான ஒளி இல்லை. பகலவன் மறைந்தபின் விளக்குகளும் நட்சத்திரங்களும் ஒளி தந்தாலும், தெளிவான நிலவின் ஒளிக்கு ஈடாகாது!

இந்தியாவில் தோன்றிய புத்தன், மக்களுக்கு வழிகாட்டினர். அவர்கள் நிலவு போல இருளைப் போக்கி அறிவொளியை வழங்கியதால், இந்த நாடு ‘இந்து’ (நிலவு) என அழைக்கப்படுகிறது. என்று தெளிவாக விளக்கியுள்ளார்.

பண்டைய தம்மலிப்பி(புத்தர் காலம் முதல் அசோகர் காலம் வரை எழுதப்பட்ட மொழி (பின்னர் பாலி மற்றும் சமஸ்கிருந்தமாக மாறிய மொழி)யில் இந்து (इन्दु – Indu) என்ற சொல்லுக்கு “நிலவு” என்ற பொருள் உண்டு.)

பெயரின் தாக்கம்

யுவான் சுவாங்கின் விளக்க உரை சீனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சீன மொழியில் ‘இந்து’ என்ற பெயர் படிப்படியாக நிலைத்து, இன்றும் சீனாவில் இந்தியாவைக் குறிக்கும் அதிகாரப்பூர்வப் பெயராக உள்ளது.

“சிந்து → ஹிந்து → இந்து” என்ற மொழியியல் மாற்றத்தால் உருவான பெயருக்கு, யுவான் சுவாங் சீன மொழியில் இருந்த “நிலவு” என்ற அர்த்தத்தை இணைத்து, இந்தியாவை அறியாமை இருளைப் போக்கும் ஞான நிலவு என்று உருவகப்படுத்தினார். இது வெறும் பெயர் வரலாறு மட்டுமல்ல; இந்தியாவை இன்றைய ஆப்கானில் இருந்து துவங்கி காஷ்மீரம் வடக்கி இந்தியா (இன்றைய உத்தரப்பிரதேசம், பீகார்) மேற்கு இந்தியா (இன்றைய மேற்குவங்கம், ஒரிசா), தக்காணம், தென் இந்தியா, அதன் பிறகு குடகு கோங்கன் மராட்டியப் பகுதி, குஜராத் பின்னர் மத்திய இந்தியா வழியாக (மதுரா) பஞ்சாப் சென்று மீண்டும் காஷ்மீரம், ஆப்கான் என இந்தியாவை முழுமையாக சுற்றியவர் யுவான் சுவாங். ஆகையால் தான் இவரது பதிவு இந்தியாவைப் பற்றி அறிவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

இவர் தெளிவாக கலிங்கம், குஜ்ஜரம் போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். அதாவது அவர் இந்தியத் தீபகற்பம் முழுமையாக ஒரே பெயரில் அழைக்கப்படவில்லை என்பதும் அவரது பதிவுகளில் உறுதியாகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *