சென்னை, நவ. 20- சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் முகாம் அலுலவகத்தின் வாயிலில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறியதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை புரம், பொதிகை வளாகத்திலுள்ள பாமினி இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புதிய முகாம் அலுவலகமாகவும் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை முதலமைச்சர் ஜோசப் விஜய் நவம்பர் 17 அன்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளார்களும் வந்திருந் தனர். ஆனால் அங்கு வந்திருந்த காவல்துறையினர் பத்திரிகையாளர் களை அனுமதிக்காத நிலையில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள், சிஎம் சார், மாண்புமிகு முதலமைச்சர் என கோஷம் எழுப்பினர். அங்கு நடந் ததையும் காட்சிப் பதிவு எடுத்தனர். இந்த காட்சிப் பதிவு தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.
இந்தநிலையில் காவல்துறையினரின் செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கிரீன்வேஸ் சாலை, பொதிகை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முகாம் அலுவலகத்தின் புதிப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் நேற்று (19 மாலை 4 மணியிளவில் அங்கு வந்துள்ளார். இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரி கையாளர்கள் பொதிகை வளா கத்திற்கு சென்றுள்ளனர். அப் போது காவல்துறையினர் பத்திரி கையாளர்களை பொதிகளை வளா கத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பத்திரிகையா ளர்கள் மக்கள் தொடர்புத்துறை அலுவலரை தொடர்புகொண்டு பேசியபோது, வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் வளாகத்திற்கு வெளியிலிருந்து செய்தி சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும், பொதிகை வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையின் எதிர்புறத்தில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைத்துள்ள தடுப்புகளுக்குப் பின்னால் சென்று நின்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆணையர் தனசெல்வன் பத் திரிகையாளர்களை அந்த இடத் தில் நிற்கக்கூடாது என்று கூறி யுள்ளார். செய்தி சேரிக்க விடாமல் ஏன் தடுக் கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் பத்திரிகையளார்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தி யுள்ளார்.
பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, கண்ணியக்குறைவாக நடத்திய காவல் உதவி ஆணையர் தனசெல்வன் மற்றும் காவலர்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகை யாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
