இந்நாள் – அந்நாள்

- Advertisement -

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் –
நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று (20-11-1916)

 

திராவிட இயக்க முன்னோடிகள் டாக்டர் டி. எம். நாயா்,  டாக்டர் நடேசனார், மற்றும்  சா்.பி.டி. தியாகராயா் ஆகியோரது முயற்சியால்  பார்ப்பனா் அல்லாதோர் உரிமைக்காக  110 ஆண்டு களுக்கு முன் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) தொடங்கிய நாள் இன்று (20-11-1916).

இதனை ‘தென்னிந்தியர் விடுதலைக் கூட்ட மைப்பு’ என்றும் கூறுவர்.

இந்த கட்சி தொடங்கிய ஆங்கில ஏட்டின் பெயர் ‘JUSTICE’.

தமிழ் ஏட்டின் பெயர் ‘திராவிடன்’.

மக்கள் JUSTICE  கட்சி என்பதைத் தமிழில் “நீதிக்கட்சி” என்று அழைத்தனர்;  தமிழ் ஏட்டின் பெயரால் திராவிடக்கட்சி என்றனர்.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற பெயர் எப்போதும் மாற்றப்படவே இல்லை.

தந்தை பெரியார் அவர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பெல்லாரி சிறையில் இருந்த போது சென்னையில் 2 நாள்கள் நடந்த நீதிக் கட்சி மாநாட்டில் 29.12.1938 அன்று தந்தை பெரியார் அவர்கள் நீதிக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கமும் தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் ஒரே இயக்கமாயிற்று.

 

“புரட்சி” என்ற வார ஏடு ஒன்று தந்தை பெரியார் அவர்களால்  துவங்கப்பட்ட நாள் இன்று (20-11-1933).

தகவல் : பாணாவரம் பெ.வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *