சென்னை, நவ.20- தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவில் விருது வழங்கப் படும் என தழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ஆண்டு தோறும் மாநில அளவில் விருது வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக சுகாதாரத் துறை செயலர் தாரேஸ் அகமது நேற்று (1911.2026) வெளியிட்ட அரசாணையில் கூறி யிருப்பதாவது:
மருத்துவப் பயனாளி களின் நலனுக்காக அன் புடனும் கருணையுடனும் தன்னலமற்ற சேவை யாற்றும் செவிலியர்களைக் கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் மே 12ஆம் தேதி பன்னாட்டு செவிலியர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநில சிறந்த செவிலியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கு மருத் துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் இருந்து 3 செவிலியர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தில் இருந்து 3 செவிலியர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்ககத்தில் இருந்து 3 செவிலியர்கள் அல்லது துணை செவிலியர்கள், தனியார் மருத்துவ மனைகளில் இருந்து 3 செவிலியர்கள் என மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருதுக்குத் தேர்ந் தெடுக்கப்படும் ஒவ்வொரு செவிலியருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை வழங்கப் படும். இதற்காக 2026-2027ஆம் நிதியாண்டு முதல் ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்படும். செவி லியர்களின் புற மருத்துவ பயனாளிகள் மற்றும் உள் மருத்துவ பயனாளிகள் பராமரிப்பு, பிரசவ கால சேவைகள், நேரம் தவறாமை, தூய்மைப் பராமரிப்பு, மருத்துவ பயனாகளிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த விருதுக்கான தேர்வு நடைபெறும். இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரி யாகச் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் செயல்படுவார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதலமைதச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரூ.42.72 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,695 தொகுப்பூதிய செவிலி யர் பணியிடங்கள் உருவாக் கப்பட்டுள்ளன.
