இயலுமா?
நான் மனிதச் சமுதாயப் பழமையை அழித்து முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறவன், என்னுடைய இலட்சியம் உருவில் மனிதனாகவும், செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனிதத் தன்மையுடைய மனிதச் சமுதாயமாக ஆக்க வேண்டும் என்பதுதான். அதன்படி என்ன செய்தாலும் இக்கொள்கைக்கு ஏற்படும் பயனைக் கருதித்தான் நடந்து கொள்வேன். அதனால்தான் ஒரு மனிதச் சமுதாயத் தொண்டனாக ஆக முடிந்தது. இவ்விதமின்றி வேறு போக்குடையவனாய் இருந்திருப்பேனேயானால் மனிதச் சமுதாயத் தொண்டாற்ற இயன்றிருக்குமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
