சென்னையில் ஓலா, உபர் உள்ளிட்ட செயலி வழி டாக்ஸி சேவைகளைப் போல மற்றொரு புதிய நிறுவனமும் களமிறங்குகிறது. வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி இயங்கும் கிரீன் எஸ்.எம். (Green SM) டாக்ஸி சேவை, சென்னை, பெங்களூருவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
